;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (16.02.2018)

0

பௌஸிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

இராஜாங்க அமைச்சர் எ.எச்.எம் பௌஸிக்கு எதிராக இழஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு மே மாதம் 23 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

அரச வாகனத்தினை தனியார் தேவைக்கு பயன்படுத்தி, 10 லட்சத்திற்கு அதிகாமான ரூபாய் தொகை இழப்பை அரசுக்கு ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் அவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

கொழும்பு மேலதிக நீதவான் புத்திக ஸ்ரீ ராகலயிடம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது சாட்சியாளர்கள் இன்று நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளனர்.

இந்நிலையில், சாட்சியாளர்களை மீண்டும் மே மாதம் 23 ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கல்லாறு யானையின் மரணம் இயற்கையானது

வில்பத்து வனப்பகுதியில் துப்பாக்கியால் சூட்டு கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட கல்லாறு யானையின் மரணம் இயற்ககையானது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனவிலங்கு விசேட மருத்துவர் தாரக பிரசாத் இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த யானையின் உடல் பாகங்கள் பரிசோதனை செய்யப்பட்டுள்ள நிலையில், அது கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட இடத்திலும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைக்கு அமைய இந்த முடிவுக்கு வரப்பட்டுள்ளது.

கல்லாறு யானையின் மீது துப்பாக்கிச் சூடு நடாத்தப்படவில்லை என உறுதியாக கூற முடியும் என்பதுடன், மின்னல் அல்லது மின்சார தாக்கத்தாலும் இந்த மரணம் சம்பவிக்கவில்லை என அந்த மருத்துவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த யானையின் தந்தங்கள் வெட்டியெடுக்கப்பட்ட நிலையில், அதனை சந்தேக நபர்கள், 50 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்ய முயற்சித்த போது அநுராதபுரம் காவல்துறையால் அவை கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

பால் ஏற்றிச் சென்ற பாரவூர்தி விபத்து

சுமார் 10 ஆயிரம் லீற்றர் பாலை ஏற்றிச் சென்ற பரவூர்தி விபத்தற்குள்ளானதில் பாதிக்கப்பட்டிருந்த அட்டன் – கொட்டகலை பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கை மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளது.

திம்புள்ள – போகாவத்தையில் இருந்து முல்லேரிய பகுதிக்கு பாலை ஏற்றிச் சென்ற பாரவூர்தியே நேற்று இரவு இவ்வாறு விபத்திற்குள்ளானது.

அதிக வளைவு பகுதியில் பாவூர்தி பயணித்த போது, அது வீதியை விட்டு விலகி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாருக்கும் ஆதரவு இல்லை

ஏனைய கட்சிகளுடன் இணைந்து உள்ளுராட்சி மன்றங்களின் ஆட்சியை ஸ்தாபிக்கவோ அல்லது அரசாங்கத்தை நிறுவவோ எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லை என ஜே.வீ.பி தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அதன் தலைவர் அனுரகுமார திசாநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு கட்சியும் ஆட்சியமைக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டிய தேவை ஜே.வீ.பிக்கு இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலைமைக்கான பொறுப்பை ஜனாதிபதியும், பிரதமரும் ஏற்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

17 + seventeen =

*