;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (16.02.2018)

0

நீர்நிலைகளின் நீர்மட்டம் வீழ்ச்சி.

மத்திய மலைநாட்டு பகுதிகளில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக தற்போது பல நீர்நிலைகளின் நீர்மட்டம் வெகுவாக குறைவடைந்துள்ளது.

மின்சக்தி மற்றும் புத்தாக்க அமைச்சு இதனை தெரிவித்துள்ளது.

காசல்ரீ, மவுசாக்கலை, கொத்மலை மற்றும் ரந்தெனிகல ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவடைந்துள்ளது.

காசல்ரீ நீர்தேக்கம், பெருக்கெடுக்கும் மட்டத்தில் இருந்து 16 அடி வரை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விவாகரத்து வரை செல்ல தேவையில்லை – ரஞ்சன்

ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தனர்.

இதில் , கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களும் மற்றும் பிரதி அமைச்சர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

அதேபோல் , ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி அமைச்சர்கள் சிலர் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

அதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க , திருமணமொன்றை விவாகரத்து வரை கொண்டு செல்லும் வகையில் செயற்படாதிருப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக தெரிவித்தார்.

“ஒரே மாதத்தில் 31 எய்ட்ஸ் நோயாளிகள்”

இலங்கையில் எச்.ஐ.வி தொற்றினால் அதிகம் பாதிப்படைபவர்கள் ஆண்களாக இருப்பதை கடந்த ஆண்டுப் பதிவுகள் சுட்டிக்காட்டுவதாகவும் கடந்த இரண்டே மாதங்களுக்குள் 31 பேர் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் வைத்திய கலாநிதி வீரசிங்க தெரிவித்தார்.

எச்ஐவி தொற்று தொடர்பில் இன்று (16) விளக்கமளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

“கடந்த வருடத்தில் 281 பேர் எய்ட்ஸ் நோயால் தாக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 220 பேர் ஆண்கள். இவ்வருடத்தின் முதல் மாதத்திலேயே 31 பேர் இந்த வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

“2013 முதல் கடந்த வருடம் வரை இத்தொற்றில் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களே அதிகம். கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களிலேயே தொற்றுக்குட்பட்டவர்கள் அதிகளவில் இனங்காணப்பட்டுள்ளனர்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*