;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (17.02.2018)

0

பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து மீட்கப்பட்ட அதிர்ச்சிகர விடயம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரேசில் நாட்டு பெண்ணொருவரின் வயிற்றில் இருந்து கொகையின் என சந்தேகிக்கப்படும் கெப்சூழ்கள் மீட்கப்பட்டுள்ளன.

சந்தேகத்திற்கிடமான குறித்த பெண் நீர்கொழும்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே, அவர் விழுங்கியிருந்த 45 கெப்சூழ்கள் மீட்கப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் கடும் வறட்சி காலநிலை

நிலவுகின்ற வறட்சி காலநிலை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் 66 ஆயிரத்து 436 குடும்பங்களில் 2, 16 018 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு தற்போது குடிநீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலத்தில் அரசியலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள்

எதிர்வரும் காலத்தில் அரசியலில் ஏற்படக் கூடிய மாற்றங்கள் தொடர்பில் அமைச்சர் மகிந்த அமரவீர மட்டக்குளியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் குறிப்பிட்டார்.

அரசியலில் ஏற்பட்டுள்ள உறுதியற்ற தன்மையில் எதிர்வரும் சில தினங்களில் முன்னேற்றங்கள் ஏற்படும் என அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.

அரசாங்கம் என்ற வகையில் தங்களது பொறுப்புக்கள் முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசியல் நிலைப்பாடுகள் குறித்து பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

நாட்டுக்கு நன்மைபயப்பவை அன்றி நாட்டுக்கு தீங்கிலைக்கும் எந்தவொரு தீர்மானமும் ஜனாதிபதியினால் மேற்கொள்ளப்படமாட்டாது.

மக்களின் ஆணையை கருத்தில் கொண்டு சிறந்த முறையில் அரசாங்கம் முன்னோக்கிச் செல்லும் என அமைச்சர் அமரவீர குறிப்பிட்டுள்ளார்.

புதுக்கடை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் தொடர்பில் விசேட காவற்துறை குழுக்கள்

கொழும்பு – புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை அடையாளம் காண்பதற்கு 3 விசேட காவற்துறை குழுக்கள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வாழைத்தோட்டம் பகுதியை சேர்ந்த 39 வயதுடைய நபரொருவரே இவ்வாறு துப்பாக்கிப்பிரயோகத்திற்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக காவற்துறை தெரிவித்தது.நேற்று பிற்பகல் 4.30 மணியளவில் இந்த துப்பாக்கப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்ட சந்தேகநபர் பிரதேசவாசிகளால் தாக்கப்பட்டுள்ள நிலையில், காவற்துறையினர் அவரை கைது செய்துள்ளனர்.

படுகாயமடைந்த நிலையில் சந்தேகநபர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ஜனாதிபதிக்கும் சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனுக்கும் இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சந்திப்பு நேற்று இடம்பெற்றதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + seven =

*