;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (17.02.2018)

0

புதுக்குடியிருப்பில் அட்டகாசம் செய்யும் யானைகள்

புதுக்குடியிருப்பு நகரப்பகுதி குடிமனைகளுக்குள் காட்டு யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

முல்லை பெருங்காட்டு பகுதிகளில் இருந்து படையெடுத்த யானைக் கூட்டங்கள் முல்லைத்தீவு, பரந்தன் பிரதான வீதியை கடந்து சென்று நகரப்பகுதியில் நிலைகொண்டுள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்த யானைகள் பொதுமக்களின் காணிகளுக்குள் புகுந்து தென்னங்கன்றுகள் உள்ளிட்ட வாழ்வாதாரப் பயிர்களை அழித்து நாசமாக்குவதோடு, இதனால் தாம் அச்சத்துடனேயே வாழ்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அங்கு நிலைகொண்டுள்ள யானைகளை காட்டுப் பகுதிக்குள் அனுப்புவதற்கு வனவிலங்கு பாதுகாப்பு பிரிவு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் இரத்ததான நிகழ்வொன்று இடம்பெற்றுள்ளது.

மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமாரின் வழிகாட்டலில் மட்டக்களப்பு மாவட்ட இரத்த வங்கியுடன் இணைந்து குறித்த இரத்ததான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை இரத்த வங்கியின் இரத்தத் தட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, மாவட்ட செயலக அதிகாரிகள், உத்தியோகத்தர்கள், பிரதேச செயலகங்களின் உத்தியோகத்தர்கள், முப்படையினர், பிரதேச விளையாட்டுக் கழகங்களின் உறுப்பினர்கள், எனப்பலர் கலந்து கொண்டு இரத்ததானம் வழங்கியுள்ளனர்.

மேலும், இந்த இரத்ததான முகாமில் கொழும்பு நாரஹேன்பிட்டியிலுள்ள பிரதான இரத்த வங்கியின் பணிப்பாளர் வைத்தியர் ருக்சான் பெல்லன கலந்து கொண்டுள்ளார்.

மீண்டும் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ள இலங்கை ரூபாய்

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாய் பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள ஸ்திரமற்ற அரசியல் நிலைமை மற்றும் ஏற்றுமதியாளர்களின் டொலர் தேவை காரணமாக இந்த வீழ்ச்சி நிலை ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை நேற்றைய தினம் 156.66 ரூபாயாக பதிவாகியுள்ளது.

கடந்த புதன்கிழமை முதல் இவ்வாறு டொலர் பெறுமதி வீழ்ச்சிடைவதனை காண முடிந்துள்ளது.

இந்நிலையில், இந்த வருடத்தின் இதுவாரையான காலப்பகுதியில் நூற்றுக்கு 1.1 வீதம் ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது.

கடந்த வருடம் ரூபாய் நூற்றுக்கு 2.5 வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், 2016ஆம் ஆண்டு நூற்றுக்கு 3.9 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பரவி வரும் டெங்கு நோய்

இந்த வருடத்தில் ஜனவரி மாதத்திற்குள் மாத்திரம் டெங்கு நோயாளராக 7095 பேர் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு ஒன்று இதனை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இம் மாதம் இதுவரையான கால பகுதியில் 1921 பேர் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த வருடத்தில் 185969 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தினை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதில் தாய்லாந்து ஆர்வம்

இலங்கையுடன் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையில் கைச்சாத்திடுவது குறித்து தாய்லாந்து அரசாங்கம் ஆர்வத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து அரசாங்க தகவல்கள் இதனை தெரிவித்துள்ளன.

தெற்காசியாவில் இலங்கை முக்கிய பொருளாதார மையமாக திகழ்கிறது.

அத்துடன் கடந்த காலங்களில் இலங்கையின் பொருளாதாரம் ஆரோக்கிய நிலையில் இருந்து வந்துள்ளதாகவும் அந்த தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவற்றை கருத்திற்கொண்டே, இலங்கையுடன் பொருளாதார உடன்படிக்கைகளில் கைச்சாத்திடுவதில் தாய்லாந்து ஆர்வம் கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 + 7 =

*