;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (18.02.2018)

0

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் விசேட செயற்குழு கூட்டம் ஒன்று இன்று பிரதமரின் தலைமையில் இடம்பெறவுள்ளது.

சிறிகொத்தவில் உள்ள கட்சி தலைமைகயத்தில் காலை 11 மணிக்கு இடம்பெறவுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்துள்ளார்.

குறித்த செயற்குழுவினை பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்களுக்கு நேற்று மாலை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது அரசாங்கத்தின் நெருக்கடி நிலைமைகள் உற்பட பல விடங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை மாறினால் தாம் மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து செயற்படுவதாக அந்த கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

மாவனெல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் இதனை தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமையில் மாற்றம் ஏற்பட வேண்டும்.

சஜித் பிரேமதாச அல்லது கரு ஜெயசூரிய போன்றவர்களை கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்கவைத்து அந்த பொறுப்புக்கள் அவர்களிடம் வழங்கப்படும்பட்சத்தில், ஐக்கிய தேசிய கட்சி மீண்டும் வெற்றிப் பாதையில் செல்வதற்கான சந்தர்ப்பம் உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்து 764 சிப்பாய்கள் கைது

பொது மன்னிப்பு காலம் நிறைவடைந்த நிலையில் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்ற 2 ஆயிரத்து 764 சிப்பாய்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களில் 5 அதிகாரிகள் உள்ளடங்குவதாக இராணுவ ஊடக பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவத்துள்ளார்.

நாளைய தினம் இராணுவ ஒழுக்காற்று விசாரணையின் பின்னர்,கைது செய்யப்பட்டுள்ள சகல சிப்பாயினரையும் சேவையில் இருந்து வெளியேற்றுவதற்கான பணிகளை உடனடியாக மேற்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு தப்பிச் சென்றவர்களுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் பொது மன்னிப்பு காலம் வழங்கப்பட்டதுடன், குறித்த காலப்பகுதி நொவம்பர் மாதம் 23 ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − three =

*