;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (18.02.2018)

0

அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம் ஐந்தாம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

சமீபத்தில் நடைபெற்ற பரீட்சையில் பரீட்சார்த்திகள் பெற்ற புள்ளிகள் தற்பொழுது இணையத்தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

மாவட்ட மட்டத்தில் அரச முகாமைத்துவ சேவைக்கு தகுதி பெற்றுள்ளவர்களுக்கான வெட்டுப்புள்ளி இணையத்தளத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

தகுதி பெற்றவர்கள் நேர்முக பரீட்சைக்கு அழைக்கப்படவுள்ளனர். இதன்போது சான்றிதழ்கள் பரிசோதிக்கப்படும்.

நேர்முக பரீட்சையின் போது புள்ளிகள் வழங்கப்பட மாட்டாது என்று அரச நிர்வாக அமைச்சின் ஒன்றிணைந்த சேவை பணிப்பாளர் நாயகம் திருமதி கே.வி.பி.எம்.ஜே.கமகே தெரிவித்துள்ளார்.

வரையறுக்கப்பட்ட பரீட்சையில் சித்தி பெற்ற ஆயிரத்து 477 பேரும் பகிரங்க பரீட்சையில் சித்தி எய்தி மூவாயிரத்து 905 பேரும் அரச முகாமைத்துவ சேவையில் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 31ம் திகதி அளவில் அரச முகாமைத்துவ சேவையில் நிலவிய அனைத்து வெற்றிடங்களும் இவர்களைக் கொண்டு பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்று பணிப்பாளர் நாயகம் குறிப்பிட்டார்.

கிராம உத்தியோகத்தர்களுக்கு அலுவலகங்கள்

கிராம உத்தியோகத்தர்களுக்காக 14 ஆயிரம் உத்தியோகபூர்வ சேவை அலுவலகங்களை அமைக்க உள்நாட்டலுவல்கள் அமைச்சு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதுவரை ஆயிரம் அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதற்காக 200 கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளது. கிராம உத்தியோகத்தர்களின் கடமைகளை ஒழுங்குபடுத்தி மக்களுக்கு கூடுதலான சேவைகளைப் பெற்றுக் கொடுப்பது இதன் நோக்கமாகும் என அமைச்சு தெரிவித்துள்ளது.

பொது மக்களுக்கான ஓர் செய்தி

காவல்துறையின் செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கு மக்களின் கருத்துக்களை அறியும் வேலைத்திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை ஆணைக் குழுவினால் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் மக்களின் கருத்தறியும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் செயலாளர் ஆரியதாச குரே தெரிவித்துள்ளார்.

நாட்டின் பல பாகங்களில் மழை பொழிய கூடும்

எதிர்வரும் காலங்களில் நாட்டின் பல பிரதேசங்களில் காலை மற்றும் இரவு நேரங்களில் குளிர் காலநிலை நிலவக் கூடும் என வளிமண்டல திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதேவேளை, இன்று மாலை 2 மணிக்கு பின்னர் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என அத் திணைக்கள நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேல், சபரகமுவ, தென் மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை பொழுது மிதமான காலநிலை நிலவ கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.<

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + 20 =

*