;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (18.02.2018)

0

விஷத்தன்மையான காயொன்றை உண்ட சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி

விஷத்தன்மை கொண்ட காய் ஒன்றை அறியாத்தனமாக உட்கொண்ட சிறுவர்கள் சிலர் அரசாங்க மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்தச் சம்பவம் நேற்றைய தினம் குளியாப்பிட்டிய – கிதலவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அந்த பகுதியில் உள்ள வீடொன்றில் விளையாடிக் கொண்டிருந்த 03 தொடக்கம் 11 வயது வரையான நான்கு சிறுவர்கள் மற்றும் இரண்டு சிறுமிகள் இவ்வாறு விஷத்தன்மையான காய் ஒன்றை உட்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்த நிலையில் வேலியில் காணப்பட்ட காய் ஒன்றை பறித்து அவர்கள் உட்கொண்ட சிறிது நேரத்தில் மயக்கம் மற்றும் சுயநினைவு தப்பியுள்ளது.

இதனையடுத்து உறவினர்கள் உடனடியாக குறித்த சிறுவர்கள் மற்றும் சிறுமிகளை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

யாழ். அரியாலையில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ். அரியாலை பூம்புகார் பகுதியில் 4 கிலோ கிராம் கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த நபர் ஒருவர் இன்று பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையிலான புலனாய்வுப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ். சாவகச்சேரி கோவிலாக்கண்டி பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய குறித்த நபர் சுமார் 5 லட்சம் பெறுமதியுடைய 4 கிலோ கேரளா கஞ்சாவினை விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணம் அரியாலை பூம்புகார் பகுதிக்கு கொண்டு வந்துள்ளார்.

கஞ்சாவினை வாங்க வருவதாக கூறிய நபர்களுக்காக குறித்த நபர் காத்திருந்துள்ளார்.

அவ்வேளையில், யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் பாலித பெர்னான்டோவின் தலைமையிலான விசேட புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபரிடம் யாழ்.பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு மற்றும் துர்நடத்தைப் பிரிவுப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

விசாரணையின் பின்னர் யாழ்.நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாகவும் யாழ் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

thirteen − nine =

*