;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (20.02.2018)

0

நல்லாட்சி அரசாங்கம் மீது மாவை சேனாதிராஜா குற்றச்சாட்டு

நல்லாட்சி அரசாங்கத்தில் தமிழ் மக்களின் எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா இந்த குற்ச்சாட்டை முன்வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டார்.

சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை மீண்டும் அதிகரிப்பா..?

சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எரிவாயு கொள்கலன் ஒன்றின் விலையை 300 ரூபாவால் அதிகரிக்க, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக இவ்வாறு விலை அதிகரிப்புக்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிணை முறி அறிக்கை தொடர்பான நாடாளுமன்ற விவாதம் இன்று

பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடி தொடர்பான ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை குறித்த நாடாளுமன்ற விவாதம் இன்று மற்றும் நாளை நாடாளுமன்றில் இடம்பெறவுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கடந்த மாதம் 24ம்திகதி கட்சி தலைவர்கள் சந்திப்பு இடம்பெற்றது.

இதன்போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

13 + 13 =

*