;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (20.02.2018)

0

இலங்கையில் செயற்கை மழை

இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக இலங்கை வந்துள்ள தாய்லாந்து தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று தமது பணிகளை ஆரம்பிக்க உள்ளது.

இவர்கள் இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றும் நாளையும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 59 வீதம் வரை குறைவடைந்துள்ளதால் நீர்மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே இடம்பெறுவதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் கூறியுள்ளார்.

முற்றாக நிறுத்தப்படவுள்ள சிகரட் மற்றும் புகையிலை உற்பத்தி பொருட்களின் விற்பனை

நாட்டின் சில பிரதேசங்களில் சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனை முற்றாக நிறுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்படி வவுனியா மாவட்டத்தின் சிங்கள பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட பகுதியில், சிகரட் மற்றும் புகையிலை சார்ந்த உற்பத்தி பொருட்களின் விற்பனையை முற்றாக நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு, இதனை ஒத்திகை பார்க்கும் விதமாக இன்று (20.02.2018) முதல் அந்தப் பகுதியில் பீடி, சிகரட் புகையிலை மற்றும் புகையிலை சார்ந்த அனைத்து பொருட்களினதும் விற்பனைத் தடைக்கு அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களும் இணங்கியுள்ளனர்.

மேற்படி பிரதேச செயலக பிரிவில் உள்ள விகாராதிபதிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் காவல்துறை பொறுப்பதிகாரிகள் மற்றும் அனைத்து விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டு, அதனை மீறும் நபர்களுக்கு எதிரகா சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சைட்டம் குறித்து ஜனாதிபதியிடம் மனுவொன்று கையளிப்பு

சைட்டத்துக்கு எதிரான மக்கள் இயக்கம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றியம் என்பன இணைந்து ஜனாதிபதியிடம் மனு ஒன்றை கையளித்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த மனு கையளிக்கப்பட்டுள்ளது.

வரட்சியால் 2 இலட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு

நாட்டின் பல மாவட்டங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ள வரட்சியால் இதுவரை 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வரட்சியால் குறிப்பாக குருணாகல் புத்தளம், மன்னார், அநுராதபுரம் மற்றும் பொலனறுவை மாவட்டங்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஏதேனும் வரட்சிப் பாதிப்புக்கள் இருக்குமாயின் 117 என்ற இலக்கத்திற்கு அழைத்து அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திற்கு தகவல் வழங்குமாறு மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, தற்போது நிலவும் வரட்சி நிலை காரணமாக நீர்மின் உற்பத்தியிக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புத்தாக்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.

அத்துடன் நாளொன்றுக்கான மின் நுகர்வானது மணித்தியாலயத்திற்கு 43 ஜிகாவோட்ஸாக அதிகரித்துச் சென்றுள்ளதாக அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜெயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

16 − 14 =

*