;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (21.02.2018)

0

பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரருக்கு ஏற்பட்ட விபரீதம்

சிலாபம் – இரணவிலை அமெரிக்கக் குரல் என்ற பகுதியில் பாதுகாப்பில் ஈடுபட்டிருந்த இராணுவ வீரர் ஒருவர் முதலைத் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

காயமடைந்த இராணுவ வீரர் சிலாபம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறித்த அதிகாரி அருகில் உள்ள களப்புப் பகுதிக்கு சென்றபோது இந்த விபத்துக்கு முகம் கொடுத்துள்ளார்.

115 இலங்கை மற்றும் இந்திய மீனவர்கள் விடுதலை

கச்சத்தீவு வருடாந்த உற்சவம் அண்மித்துள்ள நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுப்பட்டார்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 109 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் நேற்றைய தினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என கடறப்படை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் நேற்றைய தினம் காங்கேசன் துறை துறைமுகத்திலிருந்து படகு மூலம் இந்தியாவிற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

இதெவேளை, இந்திய கடற்பரப்பில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுப்பட்டார்கள் என தெரிவித்து கைது செய்யப்பட்டிருந்த இலங்கை மீனவர்கள் அறுவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

காலநிலை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் வறட்சியான காலநிலை நிலவும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

வடக்கு, வடமத்திய, கிழக்கு மாகாணங்களில் காலை மற்றும் இரவு வேளைகளில் குளிரான காலநிலை நிலவக்கூடும்.

நுவரெலியா மாவட்டத்தில் காலைவேளைகளில் உறைபனிநிலவக்கூடும். வடமேற்கு மாகாணங்களிலும் மன்னார் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் 40 கிலோமீற்றர் வேகத்திற்கு மேல் காற்று வீசக்கூடும்.

நாட்டின் சில இடங்களில் காலை வேளைகளில் பனிமூட்டம்நிலவக்கூடும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − fifteen =

*