;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (21.02.2018)

0

இறந்த நிலையில் யானை ஒன்று மீட்பு

பொலன்னறுவை விதை பண்ணை அருகில் இருந்து இறந்த நிலையில் யானை ஒன்று அதிகாலை மீட்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி குறித்த யானை உயிரிழந்திருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இறந்த யானையின் அருகில் இருந்து கம்பிகள் மற்றும் வயர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை தல பாதுகாப்பு அலுவலகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை

தேசிய அரசாங்கத்தில் இருந்து விலகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொது செயலாளர் மஹிந்த அமரவீர இதனை தெரிவித்துள்ளார்.

உணவு ஒவ்வாமை காரணமாக ஏழுபேர் மருத்துவமனையில்

உணவு ஒவ்வாமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழுபேர் மட்டக்களப்பு போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

காத்தான்குடி பரகத் வீதியிலுள்ள வீடொன்றில் மதியம் உணவருந்தியவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களுள் குழந்தைகளும் சிறுவர்களும் அடங்குவதாக எமது செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில், காத்தான்குடி காவல்துறையினரும் சுகாதார பிரிவினரும் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கைதுசெய்யப்பட்ட 109 இந்திய மீனவர்கள் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைப்பு

கடல் எல்லையை மீறி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டதினால் கைதுசெய்யப்பட்ட 109 இந்திய மீனவர்கள் மீண்டும் இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்க்பபட்டுள்ளனர்.

இதேபோன்று இந்திய கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட இலங்கை மீனவர்கள் 06 பேர் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறையின் வடபகுதயிலுள்ள சர்வதேச கடல்எல்லை பகுதியில் நேற்று இவர்கள் ஒப்படைக்கப்பட்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen + fourteen =

*