;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (22.02.2018)

0

காலநிலை

நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையில் நாளை மறுதினம் முதல் (24) சிறிய மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அடிக்கடி மழை பெய்யக் கூடும்.

காலி, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

ஏனைய பிரதேசங்களில் பொதுவாக சீரான வானிலை காணப்படும் என்று வளிமண்டவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் அதிகாலை வேளையில்; உறைபனி காணப்படக்கூடும்.

இரவு மற்றும் காலைவேளைகளில் குளிரான காலநிலை எதிர்பார்க்கப்படுவதுடன், குறிப்பாக நாட்டின் தென்பகுதியின் சில இடங்களில் காலையில் பனிமூட்டம் நிலவக்கூடும்.

காலியிலிருந்து ஹாம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரையோரங்களில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன்கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

நான்கு தினங்களுக்கு புகையிரத சேவை இரத்து

மதவாச்சி மற்றும் தலைமன்னார் ஆகிய பகுதிகளுக்கிடையிலான புகையிரத சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, எதிர்வரும் 26 ஆம் திகதி முற்பகல் 9.52 முதல் எதிர்வரும் 2 ஆம் திகதி பிற்பகல் 2.20 வரை மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிரத பாதையில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்த வேளைகள் காரணமாகவே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் வீதி மூடப்பட்டுள்ளமையினால் தலை மன்னார் மற்றும் மதவாச்சிக்கிடையில் விசேட பேருந்து சேவைகள் மேற்கொள்ளப்படடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீயணைப்பு., காரணம் அறியப்படவில்லை

பேருவளை – ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு தீ பரவியுள்ளடன் பிரதேச மக்கள் மற்றும் களுத்துறை நகர சபை தீயணைப்பு பிரிவு இணைந்து தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெத்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன் வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × one =

*