;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (22.02.2018)

0

நாமலுக்கு அனுமதி

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டு பயணத் தடை தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளது.

இதன்படி பெப்ரவரி 26 ஆம் திகதி முதல் ஏப்பரல் 26 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் அவருக்கு வெளிநாடு செல்ல கொழும்பு மேலதிக நீதவான் சாந்தனி டயஸ் அனுமதி வழங்கியுள்ளார்.

நேபாள் மற்றும் ரஸ்யாவில் இடம்பெறும் இளைஞர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நாமல் ராஜபக்ஷ தனது சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் ஒரு வீதிக்கு ஐந்து மாதம் பூட்டு

கொழும்பு – ஹங்வெல்ல பிரதான வீதியில் சேதவத்த பகுதியில் நீர் குழாய் பொருத்தும் நடவடிக்கை இடம்பெறுவதால் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி அம்பத்தல சந்தியில் இருந்து களனிமுல்ல சந்தி வரையான பகுதியில் இன்று முதல் ஆகஸ்ட் மாதம் முதலாம் வரை போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

எனவே இந்த காலப்பகுதியில் முடிந்தவரை மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு சாரதிகளிடம் அந்த சபை கோரியுள்ளது.

மண் மற்றும் கால்நடைகளை கடத்தி சென்ற இருவர் கைது

சட்டவிரோதமான முறையில் மண் மற்றும் கால்நடைகளை கடத்தி சென்ற இரண்டு பேரை இன்று காலை காத்தான்குடி காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

அனுமதிப்பதிரமின்றி கொக்கட்டிச்சோலையிலிருந்து மணல் ஏற்றிவந்த டிப்பர் ரக வாகனத்தை காத்தான்குடியில் வைத்து காவற்துறையினர் தடுத்து வைத்ததுடன் அதன் சாரதி கைது செய்யப்பட்டார்.

இதேவேளை அனுமதிப்பத்திரமின்றி மண்முனையிலிருந்து 5 கால்நடைகளை ஏற்றிவந்த ஒருவரை காத்தான்குடி காவற்துறையினர் இன்று காலை கைது செய்தனர்.

அதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனத்தையும் காவற்துறையினர் தடுத்து வைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் மகிழ்ச்சி செய்தி

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள வரட்சியுடனான காலநிலை நாளை மறுதினத்துடன் ஓரளவு மாற்றமடையக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு,அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களிலும் ஓரளவு மழை பெய்யக் கூடும் என்றும் அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதவிர, இரவு வேளைகளில் காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் ரத்தினபுரி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் மழை பெய்யக் கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + eighteen =

*