;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (23.02.2018)

0

வவுனியாவில் முன் அறிவித்தலின்றி மின்சாரம் துண்டிப்பு; பொதுமக்கள் அவதி

வவுனியாவில் நேற்றுக் காலை 8.30 மணி முதல் பிற்பகல் 5 மணி வரையும் பூந்தோட்டம், மகாறம்பைக்குளம், அண்ணாநகர் போன்ற பகுதிகளில் முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டதையடுத்து அப்பகுதியிலுள்ள மக்கள் மற்றும் வியாபாரிகள், நோயாளர்கள் பெரும் பாதிப்பனை எதிர்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.

நேற்றுக் காலை 8.30 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரையும் குறித்த பகுதியில் முன்னறிவித்தல் இன்றி மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது. பல அடிப்படைத் தேவைகளைப்பூர்த்தி செய்வதில் இப்பகுதி மக்களுக்கு பெரும் நெருக்கடியான நிலை ஏற்பட்டுள்ளது. இதேவேளை மகாறம்பைக்குளம் பகுதியிலுள்ள சிறுநீரகம் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு வீட்டில் வைத்து மின்சாரத்தின் உதவியுடன் பரிசோதனை ஒன்று இடம்பெற்று வருகின்றது.

இவ்வாறு முன்னறிவித்தலின்றி மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளதையிட்டு குறித்த நோயாளர் அவல நிலைக்குச் சென்றுள்ளதுடன் தனியார் ஒருவரிடம் மின்பிறப்பாக்கி வாடகைக்குப் பெற்றுக் கொள்ளப்பட்டு அவருக்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இவ்வாறு மின்சாரத்தினை முன்னறிவித்தலின்றி நிறுத்தும்போது பல அசௌகரியங்களை சந்திப்பதாக பொதுமக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

மின்னலுடன் இடி இடிக்கலாம் என்று பொதுமக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் தற்போது காணப்படும் வறட்சியான காலநிலையில் நாளை முதல் சிறிய மாற்றம் ஏற்படலாமென்று வளமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி கிழக்கு மற்றும் ஊவாமாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யும்.

மேலும், காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தென்பகுதியின் சில பகுதிகளில் காலை மற்றும் இரவுவேளைகளில் குளிரான காலநிலை மற்றும் பனிமூட்டமுமான காலநிலை நிலவக்கூடும். காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை மட்டக்களப்பு ஊடாக திருகோணமலை வரையிலான கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு மழைபெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலின்போது பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

சாட்­சி கூண்­டில் தடு­மா­றிய விமல்

காலா­வ­தி­யான கட­வுச்­சீட்­டில் வெளி­நாடு செல்ல முயற்­சித்­தமை தொடர்­பில் முன்­னாள் அமைச்­சர் விமல் வீர­வன்­ச­வுக்கு எதி­ராக நடை­பெ­றும் வழக்கு விசா­ர­ணை­யில், நின்று கொண்டு சாட்­சி­ய­ம­ளிக்க தடு­மா­றிய விமல் வீர­வன்­ச­வுக்கு கதிரை வழங்­கிய சம்­ப­வம் நீர்­கொ­ழும்பு நீதி­மன்­றில் இரண்டு நாள்­க­ளுக்கு முன்­னர் நடை­பெற்­றுள்­ளது.

வழக்­கின் போது விமல் வீர­வன்ச சாட்சிக் கூண்­டில் நிற்­கத் தடு­மா­றி­யுள்­ளார். வழக்கு விசா­ரணை நிறை­வ­டை­யும் வரை நாற்­கா­லி­யில் அமர்ந்­தி­ருப்­ப­தற்கு சட்­டத்­த­ர­ணி­க­ளின் ஊடாக அனு­மதி கோரப்­பட்டது.

அதற்­க­மைய அங்கு அமர்ந்­தி­ருந்து சாட்­சி­ய­ளிப்­ப­தற்கு நீதி­மன்­றம் அனு­மதி வழங்­கி­யுள்­ளது. சாட்­சி­யா­ளர் கூண்­டில் விமல் வீர­வன்­ச­வுக்கு அமர்ந்­தி­ருப்­ப­தற்கு நாற்­காலி ஒன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அதி­லி­ருந்தே அவர் சாட்­சி­ய­ம­ளித்­துள்­ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × three =

*