;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (23.02.2018)

0

கஞ்சா தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கைது

ஒரு லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகம் பெறுமதியுடைய கஞ்சா தொகையுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நேற்றைய தினம் இமதுவ காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காலி இமதுவ பிரதேசத்தில் தேவாலயம் ஒன்றினை முன்னெடுத்து செல்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காவற்துறைக்கு கிடைக்க பெற்றுள்ள தகவல் ஒன்றுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

சம்பவம் குறித்து இமதுவ காவற்துறை மேலதிக விசாணைகளை முன்னெடுத்துள்ளது.

கொரிய மொழி திறன் பரீட்சையில் தோற்ற விரும்புவர்களுக்கான முக்கிய அறிவித்தல்

கொரிய மொழி திறன் பரீட்சைக்கான விண்ணப்பப்படிவ விநியோகம் எதிர்வரும் திங்கள்கிழமை முதல் ஆரம்பமாகவுள்ளது.

இந்த விண்ணப்பப்படிவம் மார்ச் மாதம் 2 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள 18 மத்திய நிலையங்களில் விநியோகிக்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இம்முறை பரீட்சை உற்பத்தி மற்றும் நிர்மாணம் ஆகிய துறைகளில் இடம்பெறவுள்ளது.

இதனுடன் கொரிய மொழி திறன் பரீட்சை, கணனி ஊடாகவே இடம்பெறவுள்ளது.

நிர்மாணத்துறைக்கான பரீட்சை மார்ச் மாதம் 19 ஆம் திகதி முதல் மே மாதம் 24 ஆம் திகதி வரையும், உற்பத்தி துறைக்கான பரீட்சை மே மாதம் 25 ஆம் திகதி முதல் ஓக்டோபர் மாதம் 5 ஆம் திகதி வரையும் இடம்பெறவுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.

மீளாய்வு மனுவை தாக்கல் செய்த கோட்டபாய

எவன்காட் வழக்கில் இருந்து தான் உள்ளிட்ட 8 பேரை விடுதலை செய்யுமாறு கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார்.

மது அருந்துவதை தடுக்க வலியுறுத்தி போராட்டம்

பதுளை – ஸ்பிரிங்வெளி தோட்டப் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தினார்கள்.

ஸ்பிரிங்வெளி கோட்டேகொட பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சி ஒன்றுக்கு அருகில் மது அருந்துவதை தடுக்க வலியுறுத்தி இந்த போராட்டம் இடம்பெற்றதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த பகுதியில் வைத்து தோட்ட முகாமையாளரும், உதவி முகாமையாளரும் நேற்று தாக்கப்பட்டுள்ளனர்.

நீர்வீழ்ச்சிக்கு அருகில் மதுபாவித்து குழப்பத்தில் ஈடுபட்ட சிலவரை எச்சரித்தமைக்காகவே அவர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

நகரில் ஒதுக்குப்புறமாக அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு அருகில் சுற்றுலா பயணிகளாக வருகின்றவர்கள் மதுபானத்தை அருந்துவிட்டு, தோட்ட மக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் நிலைமை தொடர்ந்தும் இடம்பெறுகிறது.

இவ்வாறான சம்பவங்கள் இனியும் இடம்பெறாது தடுக்குமாறு கோரி பொதுமக்கள் இன்றைய ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + 11 =

*