;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (24.02.2018)

0

காலநிலை

நாட்டில் தற்சமயம் நிலவும் வறட்சியான காலநிலையில் இன்று தொடக்கம் மாற்றத்தை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிழக்கு, ஊவா மாகாணங்களிலும், பொலநறுவை, ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யலாம்.

நாட்டின் வடபகுதியிலும், ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் மணிக்கு 40 கிலோ மீற்றர்களைத் தாண்டிய வேகத்தில் காற்று வீசலாம் என்று திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கு ஒரு கிலோ கிராமிற்கு இதுவரையில் 1/= ரூபாவாக இருந்த விஷேட பண்ட வரி இன்று (23) நள்ளிரவு முதல் 30/= ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

உள்நாட்டு உருளைக்கிழங்கு உற்பத்திகள் சந்தைக்கு வருவதால் உள்நாட்டு விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கிலேயே இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்கிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய வரித்திருத்தம் மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையில் அமுல்படுத்தப்பட உள்ளது.

சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் எச்சரிக்கை

சமூக வலைத்தளங்களின் ஊடாக நட்பை ஏற்படுத்தும் அறிமுகமில்லாதவர்கள் மூலமாக, நிதி மோசடி மேற்கொள்ளப்படுவது தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு கணினி அவசர பதிலளிப்பு மையம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் கடந்த தினங்களில் பல்வேறு சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக கணினி அவசர பதிலளிப்பு மையத்தின் சிரேஷ்ட தகவல் தொழில்நுட்ப பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடத் தயாராகவுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளுர் அதிகார சபைத் தேர்தலில் தெரிவான உறுப்பினர்களின் பெயர்ப் பட்டியலை வர்த்தமானியில் வெளியிடத் தயாராக உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பட்டியல் மூலம் தெரிவான வேட்பாளர்களின் பெயர்ப் பட்டியல் கிடைக்கப்பெற்றதன் பின்னர், இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சமன்ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் மார்ச் மாதம் 2 ஆம் திகதி குறித்த பெயர்ப் பட்டியல் கிடைக்கப்பெறுமாயின், 3ஆம் திகதி பெயர்ப்பட்டியலை வர்த்தமானியில் வெளியிட முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 3 =

*