;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (24.02.2018)

0

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியால் ஏற்பட்டுள்ள ஆபத்து

ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியின் காரணமாக வெளிநாட்டு கடன் தொகையை பாரியளவில் அதிகரித்துள்ளது.

அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து செல்கின்றது.

இதன் காரணமாக வெளிநாட்டுக் கடன் தொகை சில தினங்களில் பாரியளவில் உயர்வை பதிவு செய்துள்ளது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் 1ம் திகதி இலங்கையின் மொத்த வெளிநாட்டுக் கடன் தொகை 30.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக காணப்பட்டது, அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 155 ரூபாவாக காணப்பட்ட நிலையில் இந்தக் கடன் தொகை 4774 பில்லியன் ரூபாவாக அமைந்திருந்தது.

எனினும் அண்மையில் அமெரிக்க டொலரின் விலை மேலும் உயர்வடைந்த காரணத்தினால் இந்தக் கடன் தொகை 6160 பில்லியன் ரூபாவாக உயர்வடைந்துள்ளது.

இவ்வாறு டொலரின் பெறுமதி உயர்வடைவது நாட்டின் பொருளாதாரத்தை மிகவும் மோசமாக பாதிக்கும் என பொருளியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

முல்லைத்தீவில் விசமிகளின் அட்டகாசம்

முல்லைத்தீவு – கோட்டை ஐயப்பன் கோவில் சிலைகள் விசமிகளால் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.

புலியின் மேல் அமர்ந்து இருப்பது போன்ற ஐயப்பன் சிலை ஒன்றை குறித்த கோயிலில் நிர்மாணிப்பதற்கு கோயில் நிர்வாகத்தினர் முயற்சித்துள்ளனர்.

இந்த நிலையில் சிலையை நிர்மாணிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த கருங்கற்களை கொண்டு சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் குறித்த கோயிலில் பிள்ளையார் சிலை மாத்திரம் உடைக்கப்படவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

புதிய தேர்தல் முறைமை குறித்து அறிவிக்கவில்லை

கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின் போது, புதிய தேர்தல் முறைமை குறித்து தமக்கு உரிய முறையில் அறிவிக்கவில்லை என இலங்கை ஐக்கிய கிராமசேவகர்கள் சங்கம் கண்டிக்கிளை குற்றம் சுமத்தியுள்ளது.

அந்த சங்கத்தின் கண்டிக்கிளையின் தலைவர் எஸ்.எம் விஜேகோன் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.

தமக்கு இழைக்கப்பட்ட அசாதாரணமாக குறித்த சம்பவம் தொடர்பில், எதிர்வரும் நாட்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 − four =

*