;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (24.02.2018)

0

இன்று அதிகாலை 2564 பேர் கைது

இன்று அதிகாலை நாடு பூராகவும் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் போதையில் வாகனம் செலுத்திய சாரதிகள் உட்பட 2 ஆயிரத்து 564 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிகாலை 2 மணி முதல் 6 மணி வரை மேற்கொண்ட குறித்த சுற்றிவளைப்பில், 16 ஆயிரத்து 256 காவற்றையினர் செயற்பட்டுள்ளனர்.

இதன்போது போதையில் வாகனங்களை செலுத்தியவர்கள் 504 பேரும் பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 720 பேர், குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் 741 பேர் மற்றும் போதை பொருளுடன் தொடர்புடையவர்கள் 524பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காவற்துறைமா அதிபரின் ஆலோசனையிற்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

கஞ்சா உற்பத்தி செய்த நபர் ஒருவர் கைது

வீடு ஒன்றில் சட்டவிரோதமான முறையில் கஞ்சா உற்பத்தி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடுகஸ்தொடை காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொஹாகொடை ஜயன்தி வீதி பிரதேசத்தினை சேர்ந்த குறித்த நபர், பூ செடியில் இவ்வாறு கஞ்சா செடியினை வளர்த்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

ரங்கே பண்டார தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார அரசாங்கத்தில் இருந்து விலக தயாராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளது.

இராஜாங்க அமைச்சர் எதிர்வரும் 26 ஆம் திகதி அரசாங்கத்தில் இருந்து விலகவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × 5 =

*