;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (25.02.2018)

0

அதிகளவில் நீரை பருகுவது அவசியம்

தற்போது நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக சிறுவர்கள் உடல் வரட்சிக்கு முகம் கொடுப்பதற்கான சந்தர்ப்பம் காணப்படுகின்ற நிலையில், சிறுவர்களை ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் நீராட்டுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் நோய் நல மறுத்துவ நிபுணர் தீபால் பெரேரா எமது செய்திச் சேவைக்கு இதனை தெரிவித்தார்.

அதிக வெப்பம் காரணமாக அதிகளவில் நீரை பருகுவது அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீதொட்டுமுல்ல குப்பை மேட்டு பகுதியில் நகர பூங்கா

மீதொட்டுமுல்ல குப்பை மேட்டு பகுதியில் நகர பூங்கா ஒன்று மற்றும் வீடமைப்புத் திட்டம் ஒன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சினால் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கான திட்டமிடல்களுக்காக விரைவில் சர்வதேச அளவில் கேள்விமனு கோரப்படவுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இந்த கேள்வி மனு அழைப்பிற்கு 6 தொடக்கம் 8 மாதங்கள் ஆகும் என தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய நிலையில் அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

7 ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கை.

பொதுத் தேர்தல் ஒன்றை நடத்தும் நோக்கில் எதிர்வரும் 7 ஆம் திகதி முதல் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என ஒன்றிணைந்த எதிரணி தெரிவித்துள்ளது.

கம்பஹ உடுகம்பொல பகுதியில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் கூட்டம் ஒன்றின்போது ஒன்றிணைந்த எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது.

இந்த கூட்டத்தில் கம்பஹ மாவட்டத்தில் ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட்ட பலர் தெரிவித்துள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

2 + 19 =

*