;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (25.02.2018)

0

எரிபொருள் ,அரிசி இறக்குமதிக்கான செலவினம் அதிகரிப்பு

கடந்த வருடத்தில் இறக்குமதி செலவு இரண்டாயிரத்து 100 கோடி அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருப்பதாக இலங்கை மத்தி வங்கி தெரிவித்துள்ளது.

எரிபொருள் மற்றம் அரிசி இறக்குமதிக்கான செலவினம் அதிகரித்தமையே இதற்கான காரணமாகும். இதற்கு மேலதிகமான தங்கம் மற்றும் கோதுமை இறக்குமதிக்காக மேலதிகமாக செலுத்த வேண்டி ஏற்பட்டதாகவும் மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.

இருப்பினும் இயந்திர உபகரணங்கள், சீனி, உரம், பலசரக்கு முதலானவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதற்கு 2017 ஆம் ஆண்டில் குறைந்த தொகையே செலவிட்டப்பட்ட வங்கி தெரிவித்துள்ளது.

50 ஆயிரம் மெற்றிக் தொன் கரும்பின் மூலம் 20 ஆயிரம் மெற்றிக் தொன் சீனி உற்பத்தி

செவனகல சீனிததொழிற்சாலையில் 2018 ஆம் ஆண்டுக்கான கரும்பு அரைக்கும் பணி இன்று ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் மெற்றிக் தொன் கரும்பின் மூலம் 20 ஆயிரம் மெற்றிக் தொன் சீனியை உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கே.டபிள்யு. வை. ஜயதிலக தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று சில வீதிகளில் போக்குவரத்தை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது

மரதன் சைக்கிளோட்டம் மற்றும் நீச்சல் போட்டி ஆகிய மூன்று சர்வதேச மெய்வல்லுனர் விளையாட்டு நிகழ்வு இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

கொழும்பு கோட்டை கொள்ளுப்பிட்டி பம்பலப்பிட்டி மற்றும் வெள்ளவத்தை பிரதேசங்களிலுள்ள வீதிகளை உள்ளடக்கிய வகையில் இவை நடைபெறுவதால் இன்று அதிகாலை 5 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலான காலப்பகுதியில் கொழும்பு கோட்டை, ஷையித்தியா வீதி, காலிமுகத்திடல் வீதி, காலி வீதி மற்றும் கொள்ளுப்பிட்டி சந்தி வரையிலும், கொள்ளுப்பிட்டி ரெயில் நிலைய வீதி மற்றும் கரையோர வீதியில் வெள்ளவத்தை வீதி வரையிலும் வாகனப் போக்குவரதது கட்டுப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிசார் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

உறுதி மொழியினை துரிதகதியில் மேற்கொள்ள தீர்மானம்

அடுத்த வாரம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு வழங்கிய சில உறுதி மொழியினை துரிதகதியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

குறிப்பாக காணாமல் போனோர் தொடர்பாக ஸ்தாபிக்கப்பட்ட காரியாலயத்தை முழு அளவில் தொழில்படுத்தபடவுள்ளது.

அத்துடன் காணாமல் போவது தொடர்பான குற்றச்செயலை குறிக்கும் சட்டமியற்றலையும் மேற்கொள்ள தீர்மானித்துள்ளது.

அதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான காரியாலய ஆணையகத்திற்கான உறுப்பினர்களின் பெயர்கள் சட்டமியற்றும் சபையினால் பிரந்துரை செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் ஜனாதிபதியினால் ஏற்றுக்கொள்ளப்பட்ட போதிலும், அவர்களின் விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − 5 =

*