;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (26.02.2018)

0

பயங்­க­ர­வாத சட்­டத்தில் கைது செய்­யப்­பட்­டவர் 12 வரு­டங்­களின் பின் விடு­தலை..!!

இரா­ணு­வத்தைச் சேர்ந்த மேஜர் முத்­தலிப், ஜெனரல் பாரமி குல­துங்க ஆகிய இரு­வ­ரையும் சதித்­திட்டம் தீட்டி கொலை செய்­வ­தற்கு பயன்­ப­டுத்­து­வ­தற்­காக ரி–56 ரக தன்­னி­யக்க ஆயு­தத்தை உட­மையில் வைத்­தி­ருந்­த­தாக 2006ஆம் ஆண்டு பயங்­க­ர­வாத புல­னாய்வுப் பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்ட வாசு­கோபால் தஜ­ரூபன் என்­பவர் 12 வரு­டங்­களின் பின்னர் நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்ற நீதி­ப­தி­யினால் விடு­தலை செய்­யப்­பட்டார்.

2005ஆம் ஆண்டு மேஜர் முத்­தலிப், ஜெனரல் பாரமி குல­துங்க ஆகிய இரு­வ­ரையும் கொலை செய்ய சதித்­திட்டம் தீட்­டிய­தாக விடு­தலைப்புலி உறுப்­பி­ன­ரான வாசு­கோபால் தஜ­ரூ­ப­னுக்கு எதி­ராக சட்­டமா அதி­ப­ரால் சதித்­திட்டம் தீட்­டி­ய­தாக மூன்று வழக்­குகள் கொழும்பு மேல் நீதி­மன்­றத்­திலும் ரி–56 தன்­னி­யக்க ஆயு­தத்தை உட­மையில் வைத்­தி­ருந்­த­தாக நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்றில் ஒரு வழக்­கு­மாக நான்கு வழக்­குகள் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்­தன. கொழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்­கு­களில் விடு­த­லை­யா­கி­யி­ருந்த வாசு­கோபால் தஜ­ரூப­னுக்கு எதி­ராக நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்ட வழக்கு கடந்த 23ஆம் திகதி விசா­ர­ணை­க்கு எடுத்துக் கொள்­ளப்­பட்­டது

அரச தரப்­பினால் விசா­ர­ணைக்கு அழைக்­கப்­பட்ட சாட்­சி­க­ளினை குறுக்கு விசா­ரணை செய்த எதி­ரியின் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி கே.வி தவ­ராசா, அர­ச­த­ரப்பு சாட்­சி­யங்­களின் சாட்­சியத்தில் பல முரண்­பா­டு­களை நீதி­மன்றின் கவ­னத்­திற்கு கொண்டு வந்­த­துடன் எதி­ரி­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டை அரச தரப்பு நியா­ய­மான சந்­தே­கத்­திற்கு அப்பால் நிரூ­பிக்கவில்­லை­ என்­பதை சுட்­டிக்­காட்­டினார். எதி­ரியை விடு­தலை செய்­யு­ம்படி அவர் வாதத்தை முன்­வைத்­த­தை­ய­டுத்து நீர்­கொ­ழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி எதி­ரியை விடுதலை செய்தார்

12 வருடங்களின் பின்னர் தனக்கு எதிராக சட்டமா அதிபரினால் தாக்கல் செய்யப்பட்ட நான்கு வழக்குகளிலிருந்தும் விடுதலையான வாசுகோபால் தஜரூபனை உறவினர்கள் நீதிமன்றிலிருந்து அழைத்துச் சென்றனர்.

கூட்டமைப்பின் ஐவர் அடங்கிய குழு ஜெனிவா செல்ல முடிவு..!!

ஐ.நா.மனித உரிமை ஆணைக்குழுவின் 37ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பமாகவுள்ள நிலையில் இந்த அமர்வின் உப குழு நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழு ஒன்றினையும் அனுப்பி வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் நேற்று முன்தினம் கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித்தலைவரலின் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூடடத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டம் முற்பகல் 10.30 மணிமுதல் மாலை 6.30 மணி வரை நீண்டநேரம் நடைபெற்றுள்ளது. இந்தக் கூட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஏற்பட்ட பின்னடைவு குறித்தும் அதற்கான காரணங்கள் தொடர்பிலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமைப பேரவையின் அமர்வு ஆரம்பமாகவுள்ளமையினால் அந்த விடயம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது. அரசாங்கமானது மனித உரிமைப் பேரவைக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. எனவே இந்த விடயத்தை சுட்டிக்காட்டவேண்டியதன் அவசியம் குறித்து இங்கு பலரும் வலியுறுத்தியுள்ளனர். பேரவையின் கூட்டத்தொடரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் குழுவொன்று அனுப்பப்படவேண்ஙடியதன் அவசியமும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

இதனையடுத்து 5 பேர் கொண்ட குழுவினை ஜெனிவா அமர்வில் பஙகேற்க அனுப்புவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. பாராளமன்ற உறுப்பினர் சிறிதரன் தலைமையில் 5 பேர் கொண்ட குழு ஜெனிவாவுக்கு சென்று உபகுழுக் கூட்டங்கள் உட்பட நிகழ்வுகளில் பங்கேற்பதற்கும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பின்போது ஜெனிவா விவகாரம் தொடர்பில் கருத்து தெரிவித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான குற்றத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டுசெல்லவேண்டுமென்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். அவ்வாறு கொண்டுசெல்லவேண்டுமானால் அதற்கு ஒரு நாடு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எந்தநாடும் இந்த முயற்சிக்கு இணங்கப் போவதில்லை. அவ்வாறு கொண்டுசெல்லப்பட்டாலும் வீட்டோ அதிகாரத்தைப் பாவித்து அந்த விடயம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுவிடும். எனவே இந்த முயற்சி சாத்தியப்படாது. எனவேதான் ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவில் அழுத்தங்களைக் கொடுத்து நடவடிக்கைகளை எடுக்கவேண்டியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்தக் கூட்டத்தில் காணாமல் போனோர் தொடர்பில் செயலகத்தை அமைக்கும் விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. இதன் மூலம் காணாமல் போனோர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணமுடியாது. சட்டரீதியாக காணாமல் போனவர் இறந்துவிட்டதாக சான்றிதழைப்பெறும் நிலைமையே இதன்மூலம் உருவாகும். இந்தப் பிரேரணை மூலம் பொறுப்புக்கூறவேண்டியவர்கள் காப்பாற்றப்படுவர் என்றும் இங்கு சிலர் கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

புகையிரத பாதைகளில் விபத்துக்களை தடுக்க புதிய திட்டங்கள்..!!

புகையிரத பாதைகளில் விபத்து ஏற்படும் இடங்களை அடையாளம் கண்டு அவ்வாறான விபத்துக்களைத் தடுப்பதற்காக குறுகிய கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களை நடைமுறைப்படுத்தப்படும் என்று புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் விஜய சமரசிங்ஹ தெரிவித்துள்ளார்.

குறுகிய கால பாதுகாப்பு நடைமுறையாக புகையிரதங்கள் நிறுத்தப்படும் இடங்களை குறைத்தல், புகையிரத நேர அட்டவணையில் மாற்றங்களை செய்தல் ஆகியன தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேபோன்று புகையிரத பயணிகளை தெளிவூட்டுவதற்கான ஒலிபரப்பு இயந்திரங்களைப் பயன்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

புகையிரதங்கள் விசேட வர்ணங்களைப் பயன்படுத்துவதற்கும் ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வீதிகள் அமைக்கப்படும்பொழுது புகையிரத பாதைகளுக்கு அருகாமையில் அவை இடம்பெறாதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கரையோர புகையிரத பாதையை மேம்படுத்தவும் நீண்டகாலத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three − 2 =

*