பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (26.02.2018)

பயணிகள் பேருந்தில் துப்பாக்கிப் பிரயோகம் – ஒருவர் பலி..!!
மாத்தறையில் இருந்து அம்பாறை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றினுள், ஹம்பாந்தோட்டை மிரிஜ்ஜவில சந்தியில் வைத்து நுழைந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தங்காலை நீதிமன்றத்தில் இடம்பெற்ற கொலை வழக்கு ஒன்றிற்காக சென்ற வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரே இவ்வாறு துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் மிரிஜ்ஜவில சந்தியில் பேருந்தில் ஏறி 3 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்த பின்னர் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு பின்னர் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு உயிரிழந்தவர் 33 வயதுடைய எஸ்.எச் சந்தன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக ஹம்பந்தோட்டை வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொள்ள இருவர் பேருந்தினுள் ஏறியுள்ளதாகவும் துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டதன் பின்னர் பின்னால் வந்த மோட்டர் வாகனம் ஒன்றில் ஏறி தப்பிச் சென்றதாகவும் பேருந்தின் சாரதி தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மொஹான் பீரிஸிற்கு எதிரான மனுவை விசாரிக்க தடை..!!
கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னாள் பிரதம நீதியரவர் மொஹான் பீரிஸிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுவை விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
பிரதமருக்கு பதவி வழங்கியது ஊழல்வாதிகளை காப்பாற்றவா?..!!
மக்களின் ஆணைக்கு மதிப்பளிக்காது அரசாங்கம் சர்வதிகாரப் போக்கில் புதிய அமைச்சு பதவிகளை வழங்கிமையை வன்மையாக கண்டிப்பதாக நுவரெலியா மாவட்ட ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
இன்று (26) ஹட்டனில் இடம்பெற்ற ஊடகவியளாலர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத்தேர்தலின் பின்னர் மக்களின் ஆணைக்கமைய புதிய ஊழல் அற்ற அரசாங்கம் உருவாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மாறாக ஊழல் நிறைந்த மக்கள் நிராகரித்த அரசியல்வாதிகளுக்கே மீண்டும் அமைச்சுப் பதவிகள் வழங்கப்படுள்ளது.
ஜனாதிபதியின் தலைமையில் அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினூடாக புதிய அரசாங்கம் உருவாகும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஊழல் நிறைந்த நல்லாட்சியை தொடர ஜனாதிபதி வழியமைத்துக் கொடுத்துள்ளமையானது மக்களின் தீர்ப்புக்கு எதிரானதாக கருதவேண்டியுள்ளது.
அதேபோல மத்திய வங்கியின் பிணைமுறி விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக நியமிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்த அமைச்சு பதவி வழங்கப்படமையானது ஊழல் வாதிகளை காப்பாற்றவா என சந்தேகிக்கப்பட வேண்டியேற்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
இதன்போது ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்களுக்கு அமைச்சுப்பதவி வழங்கிய சந்தர்ப்பத்தில் ஜனாதிபதியினால் அதனை ஏன் தடுத்து நிறுத்த முடியாமல் போனது? என ஊடகவியலாளர்களினால் கேள்வி தொடுத்த போது 19 திருத்தசட்டத்தினூடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு பிரதமருக்கே சகல அதிகாரங்களும் வழங்கக்கட்டுள்ளது. இந்த அதிகாரங்களை கொண்டே சர்வதிகார முறையில் அமைச்சுக்கள் வழங்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் எதிர்வரும் வாரத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர்களுக்கு புதிதாக அமைச்சுப்பதவி வழங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் அந்த அமைச்சுப் பதவிகளை பெற்றுக்கொள்ள கூடாது என்பதுடன் ஊழல் மற்றும் திருடர்கள் அற்ற தனியான அரசாங்கத்தை அமைக்க ஐனாதிபதி நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெரியசாமி பிரதீபன் தெரிவித்துள்ளார்.
புதிய அமைச்சர்களின் முதலாவது கூட்டம் நாளை..!!
நல்லாட்சி அரசில் நேற்று வழங்கப்பட்ட அமைச்சரவை மாற்றத்தின் பின்னர் முதலாவது அமைச்சரவை கூட்டம் நாளை (27) இடம்பெறவுள்ளது.
நாளை காலை 9.30 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த கூட்டம் நடைபெற உள்ளதாக அமைச்சரவை செயலாளர் காரியாலயம் அறிவித்துள்ளது.
இருப்tபினும், பல அமைச்சர்கள் தற்போது வெளிநாட்டு பயணங்களை மேற்கொண்டு உள்ளனர்.
அத்துடன் நேற்று வழங்கப்பட்ட அமைச்சரவை மாற்றம் தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல் இன்று காலை வரை அரசாங்க அச்சுத் திணைக்களத்திற்கு கிடைக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.