;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (27.02.2018)

0

சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட நபர் கைது – பெறுமதியான தேக்கமரங்கள் பறிமுதல்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் உடுப்புக்குளம் பகுதியில் சட்டவிரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட ஒருவர் ஊர்தியுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை (25.02.2018) முல்லைத்தீவு பொலிஸார் இவரை கைது செய்துள்ளார்கள். சட்டவிரோதமான முறையில் பெறுமதியான தேக்கமரங்களை கடத்தி செல்ல முற்பட்டபோதே, கேப்பாபுலவினை சேர்ந்த ஒருவரை உடுப்புக்குளம் பகுதியில் வைத்து கைதுசெய்துள்ளார்கள்.

மேற்படி நபரை, முல்லைத்தீவு பொலிஸார் இன்று (27.02.2018) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது, இவரை 15 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நீர்த்தேக்கங்களின் மூலம் பல மில்லியன் தொகை வருமானம் – அமைச்சு தெரிவிப்பு.

கடந்த வருடத்தில், அம்பாறை மாவட்டத்தில் நீர்த்தேக்கங்களின் மூலம் பல மில்லியன் தொகை வருமானமாகப் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டடுள்ளது.

இதன்படி, அம்பாறை மாவட்டத்தில் சேனாநாயக்க சமுத்திரம் உள்ளிட்ட நீர்த்தேக்கங்கங்களில் கடந்த வருடத்தில் பத்தாயிரத்து 430 மெற்றிக் தொன்னுக்கு மேற்பட்ட மீன்கள் பெறப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஆயிரத்து முந்நூற்று ஐம்பது (1350) மில்லியனுக்கும் மேற்பட்ட தொகை வருமானமாக பெறப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் ஏழாயிரத்து 200 மெற்றிக் தொன் மீனைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வவுனியாவில் ஆடு திருடிய மூவர் பொலிஸாரால் கைது

வவுனியாவில் ஆடுகளை திருடி விற்பனை செய்ய முயன்ற மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சந்தேகநபர்கள் வவுனியா – கணேசபுரம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆடுகளை திருடியுள்ளனர்.

இவர்களை பொலிஸார் தேடி வந்த நிலையில், பொலிஸார் வியாபாரிகள் போல் சென்று தேடுதலை மேற்கொண்டுள்ளனர்.

இதனையடுத்து சந்தேகநபர்கள் திருடிய மூன்று ஆடுகள் மீட்கப்பட்டுள்ளதுடன், ஆடுகளை திருடியவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் அவர்களிடமிருந்து முச்சக்கரவண்டி, மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

மேலும், சந்தேகநபர்களை விசாரணைகளின் பின்னர் நீதவான் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனனர்.

பலத்த காற்றால் பிரதான வீதியில் சரிந்து வீழ்ந்த மரம்

நிலவும் மழையுடனான காநிலையுடன் ஹோமாகம கொடகம பகுதியில் கடும் காற்று வீசியுள்ளது.

இதனால் ஹெய்லெவல் பிரதான வீதி, கொடகம சந்தியில் மரம் ஒன்று சரிந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve − one =

*