;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (28.02.2018)

0

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் மர்மமாக சுற்றித்திருந்த நபர்கள் ..!!

கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் சுற்றி திரிந்த குற்றச்சாட்டில் 16 பேர் நேற்று கைது செய்யயப்பட்டுள்ளனர்.காரணமின்றி அந்த பகுதியில் சுற்றத்திரிந்த குற்றச்சாட்டை ஏற்றுக் கொண்ட 16 பேருக்கு 24,000 ரூபாய் அபராதம் விதிக்க மினுவங்கொடை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவரிடம் 1500 ரூபாய் என்ற கணக்கிலேயே அபராத தொகை அறவிடப்பட்டுள்ளது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்ததாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த நபர்கள் பல்வேறு சட்டவிரோதமான செயற்பாடுகள் மேற்கொள்ளும் நோக்கில் கட்டுநாயக்க விமான நிலைய பகுதியில் சுற்றித் திரிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

12 மணிநேர நீர் விநியோகத் தடை..!!

நாட்டின் சில பகுதிகளில் இன்றைய தினம் 12 மணி நேர நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்நிலையில், இன்று காலை 9 மணி தொடக்கம் இரவு 9 மணி வரை குறித்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

மின்சார சபையின் புத்தாக்கல் நடவடிக்கைகள் காரணமாக குறித்த நீர் விநியோகத் தடை அமுல்படுத்தப்படுவதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

இதன்படி, களனி, பியகம, மஹர, தொம்பே, ஜா-எல, கம்பஹா ஆகிய பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளிலும், பேஹலியகொட, வத்தளை நகர சபைக்குட்பட்ட பகுதிகளிலும் குறித்த நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு நானும் ஆதரவு..!!

பிரதமருக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தானும் ஆதரவு வழங்குவதாக அமைச்சர் மஹிந்தானந்தா அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய கட்சியினரின் எதிர்ப்புக்கு முன்னர் இருந்தே தான் உட்பட கூட்டு எதிர்கட்சியினர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டுவர திட்டமிட்டு இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்துக்களை முன்வைக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

5 − 2 =

*