;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (01.03.2018)

0

நேற்றிரவு நாடு திரும்பினார் மஹிந்த

திருப்பதி சென்றிருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

திருப்பதி ஏழுமலையான் தேவஸ்தானத்தில் வழிபாடுகளை மேற்கொள்ள கடந்த செவ்வாய்க்கிழமை அவர் இந்தியா சென்றிருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் லொஹான் ரத்வத்த உள்ளிட்ட ஆறு பேர் அடங்கிய குழுவுடன் அவரின் திருப்பதி பயணம் அமைந்திருந்தது.

இந்த நிலையில், நேற்று அதிகாலை திருப்பதியில் வழிபாடுகளை மேற்கொண்ட அவர், நேற்றிரவு நாடு திரும்பியுள்ளார்.

காலநிலை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை,மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஏனைய பல இடங்களில் பிற்பகல்2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

காலியிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளின் பல இடங்களில் மாலை அல்லது இரவுவேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடற்பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடகிழக்கு திசையில் வீசும். இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோமீற்றர்வரை ) அதிகரித்து வீசக்கூடும்.

முல்லைத்தீவிலிருந்து மட்டக்களப்பு மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக காலி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட ஆழம் குறைந்த மற்றும் ஆழம் கூடிய கடற்பரப்புகளில் ஓரளவு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

களஞ்சிய சாலைகளை நிர்மாணித்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல்

வறட்சி வலயங்களில் விவசாயிகளின் அறவடைகளை களஞ்சியப்படுத்வதற்காக களஞ்சியசாலை வசதிகளை செய்துகொடுக்கும் நோக்கில் அநுராதபுரம் மொனறாகலை மன்னார் ஆகிய மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டுள்ள களஞ்சிய கட்டடத்தொகுதிகள் அந்த மாவட்ட செயலாளர்களின் கண்காணிப்பின்கீழ் தற்போது செயற்பட்டு வருகின்றன.

தற்பொழுது கட்டடப்பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுவருகின்ற கிளிநொச்சி, பொலநறுவை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள களஞ்சியசாலைகளின் செயற்பாடுகளை இவ்வருடத்திற்குள் முன்னெடுக்க எதிர்பார்க்கபபடுகின்றது.

இந்த களஞ்சிய கட்டடத்தொகுதியில் நடவடிக்கை மேற்கொள்வதற்காக பிரதேச அபிவிருத்தி வங்கியுடன் முகாமைத்துவத்திற்காக ஒப்பந்த உடன்படிக்கையை மேற்கொள்வதற்கான அதிகாரம் மாவட்ட செயலாளருக்கு வழங்கப்படவுள்ளன.

இந்த பணிகளை ஒழுங்குறுத்துதல் மற்றும் கண்காணிப்பதற்கு இதன் மாவட்டங்களில் உள்ள செயலாளர்களுக்கு அதிகாரத்தை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven + eleven =

*