;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (01.03.2018)

0

அதிபரின் மரணத்தால் 11 அதிகாரிகள் சிக்கலில்

பெண் அதிபர் மரணம் தொடர்பில் கல்வி அமைச்சின் 11 அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை 2 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 350 பொலிஸாருக்கு திடீர் இடமாற்றம்

வருடாந்த இடமாற்றத்தின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருந்து சுமார் 350 பொலிஸார் நாட்டின் இதர பகுதிகளிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு இடமாற்றப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.ஜே.ஜாகொட ஆராச்சி நேற்று தெரிவித்தார்.

ஜனவரி மாத ஆரம்பம் தொடக்கம் இந்த வருடாந்த இடமாற்றம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடைபெற்று முடிந்து உள்ளுராட்சித் தேர்தல் காரணமாக இடமாற்றம் இடைநிறுத்தப்பட்டிருந்ததன் பின்னர் இந்த இடமாற்றம் தற்போது உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இந்த வார இறுதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்படுவதாக அவர் மேலும் கூறினார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரதான நகரப் பிரதேசங்களான மட்டக்களப்பு நகரம், ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி உள்ளிட்ட மாவட்டத்திலுள்ள 12 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய சுமார் 350 இற்கு மேற்பட்ட பொலிஸார் வழமையான இடமாற்றத்திற்கு உட்படுத்தப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

ஆண் பெண் அதிகாரிகளான பிரதான பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் பரிசோதகர்கள், பொலிஸ் சார்ஜன்ற், பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரை இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டின் இதர பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றிய அதே எண்ணிகையிலான பொலிஸார் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

ராஜாங்கனை குடிநீர் திட்டம் தற்காலிகமாக இடைநிறுத்தம்

தம்புத்தேகம நகரில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்துக்கு காரணமாக அமைந்த ராஜாங்கனை குடிநீர் திட்டத்தை தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் நீர் வழங்கல் சபையின் அதிகாரிகளுக்கு நேற்றைய தினம் ஆலோசனை வழங்கியதாக அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் ஆர்.எம்.வன்னிநாயக்க எமது செய்திச் சேவையிடம் தெரிவித்தார்.

ராஜாங்கணை நீர்த்தேக்க நீரைப் பயன்படுத்தி, தனியார் துறையினரால் இந்தக் குடிநீர் திட்டம் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட இருந்தது.

குறித்த திட்டத்துக்காக அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்ததாக அநுராதபுரம் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார்.

குறித்த திட்டத்துக்கு எதிராக தம்புத்தேகமயில் விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது நீதிமன்ற உத்தரவை மீறி கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேர் எதிர்வரும் 5ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, 9 பேர் சரீரப் பிணையில் செல்ல தம்புத்தேகம நீதவான் நேற்று அனுமதியளித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

11 + one =

*