;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (02.03.2018)

0

குருமினியாகல வன பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது

வெல்லவாய – குருமினியாகல வன பகுதியில் பரவிய தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

தீ பரவல் காரணமாக 250 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

கடும் காற்று மற்றும்  வெப்ப காலநிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது.

இந்நிலையில் காவற்துறை, பிரதேச மக்கள் மற்றும் முப்படையினர் தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

இன்றும் நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பாகங்களிலும் இன்றைய தினம் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களுடன் காலி, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டத்திலும் 100 மில்லி மீட்டர் அளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மழை பெய்யும் போது மன்னாரில் இருந்து புத்தளம், கொழும்பு, மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என வளிமண்டளவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

புத்தளம் கருமாரி அம்மன் ஆலயத்தில் பிளாஸ்டிக் தொட்டியில் நீர் வெட்டு

வரட்சியான காலநிலை காரணமாக, ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 481 குடும்பங்களை சேர்ந்த, 3 லட்சத்து 57 ஆயிரத்து 144 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் இதனை தெரிவித்துள்ளது.

புத்தளம், குருநாகல், கண்டி, அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

அவற்றுள் புத்தளம் மாவட்ட மக்களே அதிகளவில் பாதிக்கப்பட்டள்ளனர்.

அந்த மாவட்டத்தில் 66 ஆயித்து 648 குடும்பங்களை சேர்ந்த 2 லட்சத்து 16 ஆயிரத்து 670 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குருநாகல் மாவட்டத்தில் 28 ஆயிரத்து 867 குடும்பங்களை சேர்ந்த 88 ஆயிரத்து 645 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னாரில் 11 ஆயிரத்து 312 குடும்வங்களை சேர்ந்த 39 ஆயிரத்து 328 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கண்டி மாவட்டத்தில் 215 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 856 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை புத்தளத்தில் நிலவி வரும் வரட்சியால் கருமாரி அம்மன் கோவிலின் வருடாந்த திருவிழாவில் நேற்று சிக்கல் ஏற்பட்டுள்ளது.

நேற்று அங்கு பிளாஸ்டிக் தொட்டியொன்றில் நீரை நிறைத்து நீர் வெட்டு நிகழ்வு இடம்பெற்றதாக எமது செய்தியளர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fourteen + 12 =

*