;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (02.03.2018)

0

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன மீண்டும் விளக்கமறியலில்

பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன இம் மாதம் 15 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ளனர்.

இன்றைய தினம் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சிறுவர் துஷ்பிரயோக சேவையை மேலும் பலப்படுத்த நடவடிக்கை

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை பொறுப்பேற்கும் 1929 என்ற சிறுவர் அலைபேசி சேவையை மேலும் பலப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள உள்ளதாக சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய தற்போதைய அலைபேசி கட்டமைப்பை, நவீன தொழில்நுட்ப ரீதியாக பலப்படுத்தவுள்ளதாக அதிகார சபையின் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பணிபுரியும் அதிகாரிகளின் எண்ணிக்கையையும் இதற்குச் சமாந்தரமாக அதிகரிக்கும் வேலைத்திட்டத்தை முன்னெடுக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த அதிகாரிகளுக்கு உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பயிற்சிகளை வழங்க எதிர்ப்பார்ப்பதாகவும் சிறுவர் அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அடுத்தடுத்து சிக்கிய ஆணும் பெண்ணும்

வத்தளை ஹெகித்த பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த ஆணொருவரும், பெண்ணொருவரும் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று பிற்பகல் காவல்துறை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய முதலாவதாக அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவரிடமிருந்து 25 கிராமும் 800 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது.

அவரிடம் மேற்கொண்ட விசாரணைக்கு பின் குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரிடமிருந்து 10 கிராமும் 700 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − seventeen =

*