;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (02.03.2018)

0

பிரதமர் – சிங்கப்பூர் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் சந்திப்பு

சிங்கப்பூருக்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அந்நாட்டின் வர்த்தக மற்றும் கைத்தொழில்துறை அமைச்சர் எஸ்ஈஸ்வரனுக்குமிடையிலான பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தை சிங்கப்பூர் போசீசன் ஹோட்டலில் இடம்பெற்றது.

தேசிய மீன்பிடித்துறை சட்டமூலம் விரைவில் அமைச்சரவைக்கு

தேசிய மீன்பிடித்துறை சார்ந்த சட்டமூலத்தை இம்மாத இறுதிக்குள் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான அறிவுறுத்லைத கடற்றொழில் நீரியியல்வள அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீர உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சை முறையாக முன்னெடுத்துச் செல்வதே, இந்த தேசிய மீன்பிடி சட்டமூலத்தின் முக்கிய நோக்கமாகும். இதுவிடயம் தொடர்பான சட்டமூல பிரேரணையை தயாரிப்பதற்கு நோர்வே அரசாங்கத்தின் பூரண ஆதரவு கிடைத்துள்ளது.

இந்த சட்டமூல ஆக்கத்திற்கென உரிய தரப்பினர் மற்றும் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைகளும் கிடைக்துள்ளன.

இன்று ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியை

காலஞ்சென்ற ஐ.நா. வதிவிட ஒருங்கமைப்பாளரும் UNDP வதிவிட பிரதிநிதியான ஊனா மெக்காலேயின் இறுதிக்கிரியை இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது.

அவரது விருப்பத்திற்கமைவாக அவருடைய இறுதிக்கிரியைகள் கொழும்பில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை இலங்கை அலுவலகம் தெரிவித்துள்ளது.

அவரது பூத்தவுடல் இன்று பி.ப 1.30 – 3.30 மணி வரை கொழுப்பு 08ல் அமைந்துள்ள ஜயரத்ன இறுதிக்கிரிகய மண்டபத்தில் வைக்கப்பட்டு பின்னர் பி.ப. 4 மணிக்கு பொரளை புதிய தகனச்சாலையில் தகனம் செய்யப்படவுள்ளது.

இறுதிக்கிரியை நிகழ்வில்இ ஐ.நா. பொதுச் செயலாளரை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலும் ருNனுP சார்பாகவும் ஊனா மெக்காலே அவர்களின் குடும்பத்தினருக்கு அனுதாபங்களை தெரிவித்துக்கொள்ளும் பொருட்டு ஐ.நா. உதவிப் பொதுச் செயலாளர் ஹயோலியாங் சு (Haoliang Xu) பங்குபற்றவுள்ளார் என்று தெரிவிக்கப்பட்டு;ள்ளது.

எதிர்வரும் 8ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில்

அரச நில அளவையாளர்கள் சங்கத்தினர் எதிர்வரும் 8ஆம் திகதி முதல் தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

இலங்கையின் காணி அளவீட்டுப் பணிகளை அமெரிக்க நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தே இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட உள்ளதாக அந்தச் சங்கத்தின் தலைவர் துமிந்த உடுகொட தெரிவித்துள்ளார்.

குறித்த நடவடிக்கைக்கு எதிராக தற்போது உள்ளக ரீதியான தொழிற்சங்க நடவடிக்கையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் நேற்று முன்தினம் ஆரம்பித்த பணிப் புறக்கணிப்பு இன்றும் தொடர்கின்றது.

தமது தொழிற்சங்க நடவடிக்கைக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தற்போதுவரை பதிலளிக்கவில்லை என பல்கலைக்கழக தொழிற்சங்களின் ஒன்றிணைந்த கூட்டணியின் தலைவர் ஹெட்வர்ட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

fifteen − three =

*