;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (03.03.2018)

0

ஸ்ரீலங்காவில் பெப்ரவரி மாதத்தில் பணவீக்கம் குறைவடைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதத்தில் 5.8 வீதமாகக் கணிக்கப்பட்டிருந்த பணவீக்கம் பெப்ரவரியில் வீழ்ச்சி கண்டிருப்பதாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு விலைச்சுட்டெண்னின் பிரகாரம் பணவீக்கம் கணிக்கப்படுகின்றது.

அதன்படி பெப்ரவரி மாதத்தில் சகல பொருட்களுக்குமான மொத்த புள்ளிகள் 121.9 ஆக பதிவாகியுள்ளதோடு 0.9 சுட்டெண் புள்ளிகள் குறைவடைந்துள்ளன.

வருடாந்த உணவுப் பொருட்களுக்கான பணவீக்கம் 10.5 வீதத்தால் வீழ்ச்சி கண்டிருந்தபோதும் ஏனைய பொருட்களுக்கான விலையில் மாற்றம் ஏற்றபடாதிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கலகொட அத்தே ஞானசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல்

சிங்கள பேரனிவாத அமைப்பான பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞர்னாசார தேரருக்கு உயிர் அச்சுறுத்தல் எழுந்துள்ளதாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அம்பாறை நகரிலுள்ள பள்ளிவாசல் மற்றும் முஸ்லீம்களின் வர்த்தக நிலையங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து இந்த கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக கலகொட அத்தே ஞானாசார தேரர் பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞர்னாசார தேரர் தனக்கு உயர் அச்சுறுத்தல் இருப்பதாக நேற்றைய தினம் கொழும்பு ஒன்றில் அமைந்துள்ள பொலிஸ் தலைமையகத்தில் உதவியாளர்கள் ஊடாக முறைப்பாட்டொன்றை பதிவு செய்துள்ளார்.

அம்பாறை நகரில் வாழும் முஸ்லீம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை அடுத்து தான் தெரிவித்ததாகக் கூறி சமூக வலைத்தளங்களில் பொய்ப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இதனை அடிப்படையாகக் கொண்டு தொடர்ச்சியாக தனக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டு வருவதாகவும் பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞர்னாசார தேரர் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.

குளவி கொட்டுக்கு இலக்காகிய 09 பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்

பொகவந்தலாவ லோய்னொன் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்து கொண்டிருந்த 09 பெண் தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் இன்று (03) காலை 11 மணியளவில் இடம் பெற்றுள்ளதாகவும் குளவி கொட்டுக்கு இலக்கான 09 பெண் தொழிலார்களும் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாக வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

தேயிலை மலையில் இருந்த குளவி கூடு கலைந்ததன் காரணமாகவே இந்த தொழிலாளர்களை தாக்கியதாக தெரிவிக்கபடுகிறது.

காயங்களுக்கு உள்ளான 09 பெண் தொழிலாளர்கள் குறித்து எவரும் அச்சமடைய தேவையில்லை எனவும் வைத்தியசாலையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

8 + 19 =

*