;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (03.03.2018)

0

புதிய வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

இந்த வருடம் ஜனவரி மாதத்தில் புதிய வாகனப் பதிவுகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதென்று இலங்கை மோட்டார் வாகன பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறிய வகை மோட்டார் கார்கள், இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் பார ஊர்திகளின் புதிய பதிவுகள் கணிசமான அளவு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அபிவிருத்தி செய்யப்படவுள்ள வீதிக்கட்டமைப்புக்கள்

அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களில் உள்ள வீதிக் கட்டமைப்புக்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

நகரத் திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் அமைச்சு இந்த வேலைத்திட்டத்தை அமுல்படுத்தவுள்ளது.

அம்பாறை மாவட்டத்தின் அட்டாளைச்சோனை, ஒலுவில், பாலமுனை ஆகிய இடங்களில் உள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட இருப்பதோடு, திருகோணமலை மாவட்டத்தில் இறக்கக்கண்டி, தோப்பூர், தம்பலகாமம் ஆகிய பகுதிகளில் உள்ள வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட உள்ளன. இதற்காக 300 மில்லியன் ரூபாவிற்கு மேற்பட்ட தொகை செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சார்க் பிராந்திய நுண்நிதி துறை மாநாடு – மார்ச் 06

சார்க் பிராந்திய நுண்நிதி துறை மாநாடு எதிர்வரும் 6ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு கொழும்பு சினமன் ஹோட்டலில் இருதினங்கள் இடம்பெறவுள்ளது

தெற்காசியாவின் நிதி உள்ளடக்கத்தை வலுப்படுத்துதல்’ என்பது மாநாட்டின் தொனிப்பொருளாகும்.

தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த 300ற்கும் அதிகமான பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்ளவுள்ளனர்.

பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்ட 8 அடி நீளமான முதலை

மொனராகல – எதிமலே பிரதேசத்தில் இன்று காலை முதலை ஒன்று பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த முதலை 8 அடி வரை நீளமானது என எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

பிரதேச மக்களினால் பிடிக்கப்பட்ட குறித்த முதலை எதிமலே வன விலங்கு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டம்

திருகோணமலையில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.

கிழக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்திற்கு முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் மேற்கொள்ளும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தை கடக்கும் நிலையிலேயே அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தினை நடத்தினர்.

இன்று காலை 10 மணியளவில் தாம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இடத்தில் இருந்து திருகோணமலை தலைமை காவல் நிலைய சந்தி வரை பேரணியாக சென்று, மீண்டும் தமது இடத்திற்கு வருகைத்தந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × five =

*