;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (04.03.2018)

0

மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும்

இன்று மாலை 2 மணிக்கு பின்னர் மேல், சபரகமுவ, தென், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் இடைக்கிடை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் என வளிமண்டல திணைக்களம் தெரிவித்துள்ளது.

சபரகமுவ மாகாணம் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 75 மில்லி மீட்டர் வரையிலான கடும் மழை பொழிய கூடும் என அத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மட்டக்களப்பு மற்றும் அம்பாறை கரையோரப் பகுதிகளில் காலை பொழுது மழை பொழிய கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மழை காலநிலை காரணமாக டெங்கு தொற்று பரவ கூடும்

இந்த வருட இதுரையான கால பகுதி வரை 11 ஆயிரத்து 162 பேர் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோய் பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் மழை காலநிலை காரணமாக டெங்கு தொற்று பரவ கூடும் என சுகாதார அதிகாரிகள் அவதான எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அர்ஜுன் மஹேந்திரனைப் பிடிக்க நடவடிக்கை

மத்திய வங்கி பிணை முறி மோசடியுடன் நேரடித் தொடர்புடையதாக கூறப்படும் பிரதான சந்தேகநபரை சர்வதேச பொலிஸாரின் ஊடாக இலங்கைக்கு அழைத்துவருவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும் அமைச்சருமாகிய மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

மத்திய வங்கி கொள்ளையுடன் தொடர்புடைய பெரும் புள்ளி நாட்டை விட்டும் வெளியேறியுள்ளார். அவர் எந்த நாட்டில் இருந்தாலும், யாருடைய தயவில் இருந்தாலும் சர்வதேச பொலிஸாரின் ஊடாக நாட்டுக்கு பிடித்து வந்து அவருக்குரிய தண்டனையை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

வீரகெட்டிய பிரதேசத்தில் நேற்று (03) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × two =

*