;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (05.03.2018)

0

கொழும்பு துறைமுகத்தில் சேவைபுரியும் கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் புறக்கணிப்பு.

கொழும்பு துறைமுகத்தில் சேவைபுரியும் கொள்கலன் பாரவூர்தி சாரதிகள் மற்றும் அதன் ஊழியர்கள் இன்றையதினம்(05-03-2018) சேவைப்புறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறக்குமதி செய்யப்படும் பொருள்களுடன் கொள்கலன்களையும் அதிக முறையில் பரிசோதனைக்கு உட்படுத்துதல் மற்றும் நிறை அளவீட்டை தனியாருக்கு ஒப்படைத்தல் ஆகிய விடயங்களை முன்வைத்து பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம் உள்ளிட்ட வடக்கில் இன்று காலை கடும் பனிமூட்டம்

இலங்கையில் தற்போது காணப்படும் மழையுடனான காலநிலை இன்றிலிருந்து எதிர்வரும் 8ஆம் திகதிவரை தற்காலிகமாக குறையக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி மேல், சப்ரகமுவ, தென் மற்றும் ஊவா மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் 2.00 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் கடற்கரையோரப் பகுதிகளில் காலைவேளையில் ஓரளவு மழை எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் நாட்டின் சில பகுதிகளில் காலைவேளையில் பனிமூட்டம் நிலவக்கூடும். கல்முனையிலிருந்து ஹம்பாந்தோட்டை, காலி ஊடாக கொழும்பு வரையான கரையோரப்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். இடிமின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதேவேளை யாழ்ப்பாண மாவட்டத்தில் இன்று காலை கனதியான பனிமூட்டம் காணப்பட்டுள்ளதுடன் குளிரான காலநிலை நிலவியமை குறிப்பிடத்தக்கதாகும்.

வளர்ந்த நாடுகளை எட்டிப்பிடித்த இலங்கை; உலக சுகாதார அமைப்பு பாராட்டு

தாய் மற்றும் சிசு மரண வீதத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நேரடி குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றில் இலங்கை பாரிய முன்னேற்றத்தை அடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த விடயத்தில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது.

இதனை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளதுடன் நாட்டின் சிசு மரண வீதம் குறைந்திருப்பதால் அமெரிக்கா போன்ற நாடுகளின் தரவுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இலங்கையில் தாய் மற்றும் சிசு மரணவீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது. உலக மட்டத்தில் கர்ப்ப காலத்தின் போதும் பிரசவத்தின் போதும் வருடாந்தம் உயிரிழக்கும் பெண்களின் எண்ணிக்கை சுமார் 3 இலட்சமாகும்.

இவற்றில் பெரும்பாலான மரணங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே பதிவாகின்றன. எனினும்இ இந்த தாய் மரண வீதத்தை கட்டுப்படுத்தும் இலக்கை இலங்கை தற்போது வெற்றி கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

9 + 12 =

*