;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (05.03.2018)

0

உலக சுகாதார அமைப்பு இலங்கைக்குப் பாராட்டு

நாட்டின் தாய் மற்றும் சிசு மரண வீதத்தை கட்டுப்படுத்தல் மற்றும் நேரடி குழந்தை பிறப்புகளின் எண்ணிக்கை என்பவற்றில் அபிவிருத்தியடைந்த நாடுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது.

இதனை உலக சுகாதார ஸ்தாபனம் பாராட்டியுள்ளது. நாட்டின் சிசு மரண வீதம் குறைந்திருப்பதால் அமெரிக்கா போன்ற நாடுகளின் தரவுகளுக்கு சமமான மட்டத்தை இலங்கை அடைந்துள்ளது.

இலங்கையில் தாய் மற்றும் சிசு மரணவீதத்தைக் கட்டுப்படுத்துவதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளையும் உலக சுகாதார அமைப்பு வரவேற்றுள்ளது.

உலக மட்டத்தில் கர்ப்ப காலத்தின் போதும் பிரசவத்தின் போதும் வருடாந்தம் உயிரிழக்கும் பெண்களின் சுமார் 3 இலட்சமாகும்.

இவற்றில் பெரும்பாலான மரணங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளிலேயே பதிவாகின்றன.

எனினும் இந்த தாய் மரண வீதத்தை கட்டுப்படுத்தும் இலக்கை இலங்கை தற்போது வெற்றி கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் வங்கிகள் எடுத்த அதிரடி முடிவு! அச்சத்தில் மக்கள்

இலங்கையில் வங்கிகளின் வட்டி வீதம் எதிர்வரும் நாட்களில் அதிகரிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வங்கிகளின் உள்ளக தகவல் வட்டாரங்கள் இதனை தெரிவித்துள்ளன.

பிணை முறி வட்டி அதிகரிப்பு, மத்திய வங்கியின் பண பெறுமதி குறைவடைந்தமை காரணமாக வட்டி வீதத்தை அதிகரிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

2017 ஆம் ஆண்டு எரிபொருளை இறக்குமதி செய்வதற்கு ஒதுக்கப்பட்டிருந்த பணத்தை விடவும் 900 மில்லியன் டொலர் அதிகமான செலவிடப்பட்டடுள்ளது. மற்றும் தங்க இறக்குமதி நிறுவனங்களுக்கு 500 மில்லியன் டொலர் அதிகரித்தமை காரணமாக அந்நிய செலாவணி பாதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கைக்கு இறக்குமதி செலவினம் ஏனைய வருடத்துடன் ஒப்பிடும் 2 பில்லியன் டொலர் அதிகரித்துள்ளது.

இந்த அனைத்து விடயங்கள் காரணமாக வங்கி வட்டி எதிர்வரும் காலங்களில் அதிகரிக்க கூடும் என வங்கி தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சீமெந்து விலை அதிகரிப்பு

தேசிய ரீதியில் உற்பத்தி செய்யப்படும் இரண்டு சீமெந்துகளின் விலையை 30 ரூபாவால் அதிகரிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை இந்த அனுமதியை வழங்கியுள்ளது.

இதன்படி 930 ரூபாவாக காணப்பட்ட 50 கிலோ கிராம் சீமெந்தின் புதிய விலை 960 ரூபாவாகும்.

சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களை இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் போது அதிக செலவுகள் ஏற்படுவதால் தேசிய நிறுவனங்கள் இவ்வாறு விலை அதிகரிப்பை கோரியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

nineteen − one =

*