;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (05.03.2018)

0

கண்டி நோக்கி ரணில் அவசர விஜயம்

கண்டி தெல்தெனியாப் பகுதியில் ஏற்பட்டுள்ள வன்மறைச் சம்பவத்தை அடுத்த ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அங்கு பயணித்துள்ளார்.

அமைச்சர் ஹலீம் விடுத்த வேண்டுகோளை அடுத்து களநிலவரத்தை ஆராய்வதற்கு ரணில் அங்கு விரைந்துள்ளார்.

திரு­­மலை கடற்­க­ரை­யில் கரை­ யொ­துங்­கும் போத்­தல்­கள்

திரு­கோ­ண­மலைக் கடற்­க­ரை­யில் மருத்­து­வ­ம­னைக் கழி­வு­க­ளான மருந்­துப் போத்­தல்­கள் சில வெறு­மை­யா­க­வும் மருந்­து­க­ளு­ட­னும் கரை­யோ­துங்­கு­கின்­றன என பகுதி கரை­யோர பாது­காப்பு ஆர்­வ­லர்­கள் தெரி­விக்­கின்­ற­னர்.

அவர்­கள் மேலும் தெரி­வித்ததா­வது:

கழி­வு­கள் எங்­கி­ருந்து கொட்­டப்­ப­டு­கின்­றன என்­பதை அறிய முடி­ய­வில்லை. கடற்­றொ­ழில் கிரா­மங்­க­ ளின் கரை­க­ளி­லும் இவ்­வா­றான போத்­தல்­கள் கரை­யொ­துங்­கு­வ­தால் இதனை சிறு­வர்­கள் எடுத்து விளை­யா­ட­வும் வாய்ப்­புள்­ளது.

இது எவ்­வ­கை­ யான மருந்­து­கள் என்று தெரி­யா­த­தால் அச்­ச­மாக உள்­ளது.

திரு­கோ­ண­மலை வெளித் துறை­மு­கத்­தில் பல நாட்டுக் கப்­பல்­கள் நங்­கூ­ரம் இட்டு நிற்­ப­தால் அவற்­றி­லி­ருந்து கொட்­டப்­ப­டும் கழி­வு­களா? என்ற சந்­தே­கத்­தை­யும் ஏற்­ப­டுத்துகின்­றது. எனவே சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் இது தொடர்­பாக நட­வ­டிக்கை மேற்­கொள்ள வேண்­டும் என்­ற­னர்.

பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகள் ஜெனிவா மாநாட்டில்

ஜெனிவாவில் நடைபெற்று வரும் 37வது மனித உரிமைகள் மாநாட்டில் 14 உப குழு கூட்டங்கள் நடைபெறவுள்ளன.

இதில் இலங்கையில் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் பிரதிநிதிகளும், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் சர்வதேச மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களும் கலந்துகொள்ள உள்ளனர்.

இதன்படி, எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 20 ஆம் திகதி வரையில் இந்த கூட்டங்கள், மனித உரிமைகள் பேரவை அலுவலகத்தின் உப அறைகளில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதன்போது பிரித்தானியா, கனடா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் பிரநிதிநிதிகளும் கலந்து கொண்டு கருத்துரைக்க உள்ளனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eleven − 3 =

*