;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (06.03.2018)

0

எதிர்வரும் மாகாணசபை தேர்தல் கலப்பு முறையில்

எதிர்வரும் மாகாணசபை தேர்தலை கலப்பு முறையில் நடத்துவதற்கு தயாராக இருப்பதாக உள்ளுராட்சிமன்ற மற்றும் மாகாணசபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

மாகாணசபை தேர்தலுக்கான எல்லைநிர்ணய பணிகள் நிறைவடைந்துள்ளன.

இதற்கு நாடாளுமன்ற அனுமதி மாத்திரம் பெறப்படவுள்ளது.

கலப்பு தேர்தல் முறையை மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நாடாளுமன்றம் அங்கிகரித்துள்ளது.

எனவே கலப்பு தேர்தல் முறைமையின் கீழாகவே மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டும்.

அத்துடன், கலப்பு தேர்தல் முறையின் மூலம் உள்ளுராட்சி மன்ற தேர்தலில் இனம்காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்து மாகாணசபை தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை ஏற்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கையில்லா பிரேரணையை ஆராய்ந்த பின்னர் தீர்மானம் – த.தே.கூ

பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்படும் பட்சத்தில், அந்த பிரேரணையின் அடிப்படைகளை ஆராய்ந்து, தங்களுக்கு இடையில் கலந்துரையாடி அதற்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து கூட்டமைப்பின் பொதுசெயலாளர் மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேநேரம், மக்களின் நம்பிக்கையை வெல்லாத எந்த அலுவலகமும், வெற்றியளிக்காது என்று, காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் கருத்து வெளியிடும் போது, மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.

பல்கலை கல்விசாரா பணியாளர்கள் அனைவரும் இன்று கொழும்பிற்கு

பல்கலைகழகங்களின் கல்விசாரா பணியாளர்கள் அனைவரும் இன்று கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

பல்கலைகழக தொழிற்சங்க ஒன்றிணைந்த குழு இதனை தெரிவித்துள்ளது.

தங்களது பிரச்சினைக்கு உரிய தீர்வு கிடைக்காததன் காரணமாக சகல பணியாளர்களும் கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் எட்வட் மல்வத்தகே தெரிவித்துள்ளார்.

5 கோரிக்கைகளை முன்னிறுத்தி கடந்த 7 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் பல்கலைகழக கல்வி சாரா பணியாளர்களின் போராட்டத்திற்கு இதுவரை எந்தவித தீர்வும் கிடைக்கபெறவில்லை.

இதனிடையே, பல்கலைகழக கல்விசார பணியாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவளிப்பதாக பல்கலைகழக நிறைவேற்று தர அதிகாரிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

அந்த சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

eighteen + ten =

*