;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (06.03.2018)

0

ஆங்கில மொழிக் கல்வியை மேம்படுத்த புதிய செயற்திட்டம்

ஆங்கில மொழி கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் புதிய செயற்றிட்டத்தை பிரிட்டிஷ் கவுன்சில் அறிமுகம் செய்துள்ளது. ஆங்கில பாட ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்துவதே இதன் நோக்கம் என கூறப்பட்டுள்ளது.

உயர்கல்வி கல்வித்துறையிலும் தனியார் தொழில் கல்வியிலும் மாணவர்களுக்கு சிறந்த வாய்ப்பை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும் என்று பிரிட்டிஷ் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டுக்குள் முன்னெடுக்கப்படவுள்ள 14 மாதங்களை கொண்ட திட்டங்களில் ஆங்கில மொழியைக் கற்பிக்கும் ஆசிரியர்களை பயிற்றுவிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

கண்டி, களுத்துறை மற்றும் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய கல்வியியற் கல்லூரிகளில் சுமார் 1000 ஆசிரியர்கள் இதன்கீழ் பயிற்றுவிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையில் பெண்கள் ஏன் கொல்லப்படுகிறார்கள்? ஆய்வு கூறுவதென்ன?

இலங்கையில் பெண்கள் தொடர்பான கொலைகள், பெரும்பாலும் மிக நெருங்கிய குடும்ப உறவுகளால் ஏற்படும் வன்முறைகளினாலேயே ஏற்படுகின்றன என்று ஐக்கிய நாடுகள் சபை மேற்கொண்டுள்ள ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

இவ்வாறான சம்பவங்களின் போது சம்பந்தப்பட்ட 60 சதவீத பெண்கள் நீதித்துறையின் உதவியை அல்லது சட்ட நடைமுறைக்கான விடயங்களை அணுகுவதில்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொடர்பான நிதியம் முதல்முறையாக இலங்கையில் மேற்கொண்ட இதுதொடர்பான ஆய்வில் இந்த விடயம் கண்டயறியப்பட்டுள்ளது.

பாலின அடிப்படையில் இடம்பெறும் இயற்கைக்கு மாறான உயிரிழப்பிற்கான பங்களிப்பு காரணங்களை கண்டறியும் நோக்கில் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலங்கையில் இந்த ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதுடன் ஐக்கியநாடுகளின் நிதியமும் களனி பல்கலைக்கழக குழுவினருடனும் இது தொடர்பிலான கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றது.

இதில், இந்த நிதியத்தின் இலங்கைக்கான பிரதிநிதி Ms. Ritsu Nacken கலந்துகொண்டார்.

இந்த கலந்துரையாடலிற்கு களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க தலைமைதாங்கினார். முதன்மை ஆய்வாளரும் களனி பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடத்தை சேர்ந்தவருமான பேராசிரியர் அனுருத்த எதிரிசிங்க, கொழும்பு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி சுபாங்கி ஹேரத், கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டப்பிரிவு பேராசிரியர் சாவித்திரி குணசேகர ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.

வெட் வரியிலிருந்து சுதந்திரம் பெற சுகாதார துறை முயற்சி

அனைத்து சுகாதார சேவைகளுக்கு வெட் வரியிலிருந்து விலக்களிக்குமாறு கோரி அமைச்சரவை திருத்தம் ஒன்றை முன்வைப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

தனிாயர் வைத்தியசாலைகளின் கட்டணம் அறிவிடுகையில் நோயாளர்களின் கட்டண அறவீடுகளுக்கு வெட் வரி சேர்த்துக்கொள்ளப்படுவதனால் அவர்கள் பாரிய சவாலுக்கு முகம் கொடுப்பதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சரவை திருத்தத்தை தயாரிக்குமாறு சுகாதார அமைச்சரினால் சுகாதார சேவை பணிப்பாளர் அனில் ஜயசிங்கவிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

You might also like

Leave A Reply

Your email address will not be published.

two × four =

*