;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (07.03.2018)

0

மறு அறிவித்தல் வரை சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை..!!

கண்டி நிர்வாக மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

உடன் அமுலுக்கு வரும் வகையில் கண்டி நிர்வாக மாவட்டத்தில் மீண்டும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டுள்ளதால் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிரிகெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது..!!

கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான வருடந்த கிரிகெட் போட்டி தற்காலிகமாக பிற்போடப்பட்டுள்ளது.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாகவே இது பிற்போடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காத்தான்குடியில் வெடிகுண்டுகள் மீட்பு..!!

மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள காங்கேனோடை பிரதேசத்திலுள்ள இரண்டு வீடுகளில் இரண்டு வெடிகுண்டுகள், இன்று (07) காலை மீட்கப்பட்டுள்ளனவென, காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

காங்கேயனோடை, பசீர்ஷேகுதாவூத் நூலக வீதியிலுள்ள இரண்டு வீடுகளிலேயே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

வீட்டு உரிமையாளர்கள், காலை எழும்பி வெளியில் வந்து பார்த்த போது, வீட்டுக்கு முன்பாக குண்டுகள் இருப்பதைக் கண்டுள்ளனர்.

இதையடுத்து, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த காத்தான்குடி பொலிஸார், விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இந்த குண்டுகள் காணப்பட்ட வீடுகளுக்கு முன்னால், “ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸ்ரீ லங்கா” என எழுதப்பட்ட பதாதையும் தொங்கவிடப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

twelve + 13 =

*