;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (07.03.2018)

0

முதற்கட்டமாக 53 சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தப்படும்

தனியார் வைத்தியசாலைகளில் ஒழுங்குறுத்தும் வேலைத்திட்டத்தின் கீழ் முதல் கட்டமாக 53 சிகிச்சைகளுக்கான கட்டணங்கள் ஒழுங்குறுத்தப்படவிருப்பதாக சுகாதார போசாக்கு மற்றும் சுதேச வைத்தியத்துறை அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.

தனியார் வைத்தியசாலைகளுடன் இணைந்து தனியார் வைத்தியத்துறைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

தனியார் வைத்தியசாலைகள் சங்கத்தின் யோசனைகள் கிடைத்தவுடன் எதிர்வரும் இரண்டு வாரத்தில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்படும் என்று அமைச்சர் ராஜித்த சேனாரட்ன தெரிவித்தார்.

2017 – 2018 பெரும் போகத்தில் அரசாங்கத்தினால் நெல் கொள்வனவு

2017- 2018 பெரும் போகத்தில் நுகர்வோருக்கான தேவையிலும் பார்க்க நெல் அறுவடை கிடைத்துள்ள மாவட்டங்களில் அரசாங்கம் நெல்லை கொள்வனவு செய்வதற்கான வேலைத்திட்டத்தை நெல் சந்தைப்படுத்தும் சபை நடைமுறைப்படுத்தியுள்ளது.

இதற்காக 500 மில்லியன் ரூபா நிதியினை திறைசேறியிடம் இருந்து பெற்று கொள்வதற்காக கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பி.ஹெரிசன் சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அரசாங்கத்தின் விசேட அறிக்கை

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கண்டி மாவட்டத்தில் ஊரடங்கு சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைதியாக வீடுகளில் இருக்குமாறு அனைவரிடமும் அரசாங்கம் கேட்டுக்கொள்வதாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்றுமுன்னர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

four × 1 =

*