;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (08.03.2018)

0

இளவரசர் மிரெட் ராட் அல் ஹுசைனுக்கும் பிரதமருக்குமிடையில் சந்திப்பு

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஆளணி எதிர் கண்ணிவெடிகளை தடை செய்வதற்கான சாசனத்தின் விஷேட தூதுவரான ஜோர்தானைச் சேர்ந்த இளவரசர் மிரெட் ராட் அல் ஹூஸைன் அல் ஹுசைன் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தார்.

இந்த சந்திப்பு நேற்று அலரி மாளிகையில் இடம்பெற்றது.

நாளை முதல் மழையுடனான காலநிலை

நாளை முதல் நாட்டின் பல பிரதேசங்களில் மழையுடனான காலநிலையை எதிர்பார்ப்பதாக காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுடன் களுத்துறை காலி மற்றும் மாத்தறை மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை தொடர்பில் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அதிருப்தி

இலங்கை அரசாங்கம் நிலைமாறுகால நீதிவழங்கல் செயற்பாடுகளின் அமுலாக்கத்தை விரைவுப்படுத்த வேண்டியது அவசியம் என்று, ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.

ஜெனீவாவில் நடைபெறும் மனித உரிமைகள் பேரவையின் 37வது கூட்டத்தொடரில் உரையாற்றும் போது அவர் இந்த விடயத்தைக் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறுதல்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதம் அதிருப்தி அளிக்கிறது.

இந்த விடயத்தை அரசாங்கம் விரைவுப்படுத்த வேண்டியது அவசியமாகும்.

பொறுப்புக்கூறுதல் மற்றும் நல்லிணக்க நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள தாமதமே, அண்மைய நாட்களில் இலங்கையில் சிறுபான்மையினருக்கு எதிராக இடம்பெற்ற சம்பவங்களுக்கு காரணமாகவும்.

இவ்வாறான சம்பவங்கள் வருத்தமளிக்கின்றன.

அரசாங்கமானது நிலைமாறுகால நீதிவழங்கல் பொறிமுறை அமுலாக்கத்தில் உரிய வகையில் செயற்படவில்லை என்றால், மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள், இலங்கை தொடர்பில் சர்வதேச நீதிப்பொறிமுறையை பயன்படுத்த ஊக்கமளிப்பதாகவும் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், மனித உரிமைகள் ஆணையாளரது இந்த அறிக்கை, எதிர்வரும் 21ம் திகதி விரிவாக ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

1 × four =

*