;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (08.03.2018)

0

சைட்டம் கல்வி நிறுவன மாணவர்களின் பிரச்சினைக்கு தீர்வு

சைட்டம் நிறுவன மருத்துவபிட மாணவர்களின் கல்விப்பிரச்சனைக்கு தீர்வு காணும் நோக்கில் அந்த மாணவர்களை சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைகழக வைத்திய பீடத்திற்கு இணைத்துக்கொள்வதற்கு பொருத்தமான நடைமுறையொன்றை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் தலைமையில் குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

பிரச்சினைகளில் கவனம் செலுத்தி, மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவாத்தை நடத்திய பின்னர் இந்த குழுவினால் வழங்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள கீழ் கண்ட சிபாரிசுகளை நடைமுறைப்படுத்ததுவதற்காக பாதுகாப்பு அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

சைட்டம் நிறுவனத்தில் தற்போது கல்வி கற்கும் மாணவர்களை மாத்திரம் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தில் இணைத்துக்கொள்ளல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை வெற்றிகரமாக பூத்திசெய்யும் மாணவர்களுக்கு வைத்திய விஞ்ஞானப்பட்டத்தினை பெற்றக்கொடுத்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை இந்த மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை பூர்த்திசெய்ய தேவையான செலவுகளை அரசாங்கம் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மாற்றுவழியில் பேஸ்புக் செல்வோருக்கு எச்சரிக்கை

பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்துள்ளதாக  தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

கண்டி மாவட்டத்தில் நிலவும் சூழ்நிலையை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஆணையம் குறிப்பிட்டுள்ளது.

அதன்படி , இணையத்தின் ஊடாக பயன்படுத்தப்படும் பேஸ்புக் , வைபர் , இமோ மற்றும் வட்ஸ்எப் ஆகிய சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசித்தல் தொடர்ந்தும் தடை செய்யப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் , மாற்றுவழிகளை பயன்படுத்தி பேஸ்புக் மற்றும் மற்றைய சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவோர் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் பேச்சாளர் ஒருவர் எமது செய்திச்சேவைக்கு தெரிவித்தார்.

அதேபோல் , இனவாத கருத்துகள் மற்றும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றுவோர் மற்றும் பரிமாற்றுவோர் தொடர்பிலும் அந்த ஆணையம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் உதவியுடன் விசாரணை செய்து வருகின்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.

நீர்வெட்டு இன்று நள்ளிரவுக்குள் வழமைக்கு

நீர்க்கொழும்பு -கட்டுநாயக்க உள்ளிட்ட சில பிரதேசதங்களுக்கு தற்போதைய நிலையில் அமுல்படுத்தப்பட்டுள்ள நீர்வெட்டு இன்று நள்ளிரவுக்குள் வழமைக்கு கொண்டு வரப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

பிரித்தானிய பிரஜை கடலில் மூழ்கி பலி

பிரித்தானிய பிரஜையொருவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

அஹூன்கல்ல பகுதியில் அவர் கடலில் நீராடி கொண்டிருந்த போது அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

76 வயதான குறித்த பிரித்தானிய பிரஜையின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை இன்று எல்பிட்டிய மருத்துவமனையில் இடம்பெறவுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

three × two =

*