;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (09.03.2018)

0

வரையறுக்கப்பட்ட சுதேச கைத்தொழில் நிறுவனத்திற்கு சர்வதேச விசேட முகாமைத்துவ தரச்சான்றிதழ்

கந்தானை வரையறுக்கப்பட்ட சுதேச கைத்தொழில் நிறுவனம் சர்வதேச விசேட முகாமைத்துவ தரச்சான்றிழை பெற்றுள்ளது.

இலங்கை தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் வழங்கப்படும் ஐஎஸ்ஓ 9001 சர்வதேச விசேட முகாமைத்துவ தரச்சான்றிழை இந்த நிறுவனம் பெற்றுள்ளது.

சுதேச நிறுவனம் விரிவான வகையில் தேகாரோக்கியத்தைக் கொண்ட, குழந்தைகள் மற்றும் புடவைகளுக்கான சவர்க்காரத்தைத் தயாரிக்கும் முன்னணி நிறுவனமாகும்.

காலநிலை

நாட்டின் காலநிலையில் இன்று முதல் மாற்றம் ஏற்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தென்பகுதியில் மழையுடன் கூடிய காலநிலை நிலவக்கூடும்.

வடபகுதியில் 40 முதல் 45 கிNலூமீற்றருக்கு மேல் காற்றின் வேகம் அதிகரிக்கும்.

கிழக்கு ஊவா மற்றும் தென் மாகாணங்களிலும் பொலன்னறுவை , மாத்தளை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடி மழை பெய்யும் .

மேற்கு , சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் .

நாட்டின் சில பகுதிகளில் சுமார் 100 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி குறிப்பாக ஊவா மற்றுமசப்ரகமுவ மாகாணங்களிலும் அம்பாறை மட்டக்களப்பு காலி மாத்தறை களுத்துறை மாவட்டங்களிலும் மழை பெய்யும்.

காலியிலிருந்து கொழும்பு ஊடாக புத்தளம் வரையான கடற்கரையோர பகுதிகளில் ஓரளவு மழை பெய்யும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக மட்டக்களப்பு வாகரை கடற்கரையோக பகுதிகளின் ஆழமற்ற கடற்பரப்பில் மழை பெய்யும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்குகூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

வடக்கிற்கான தொடருந்தின் வேகம் நாற்பது நிமிடங்களாக குறைப்பு

இலங்கையின் தொடருந்து குறுக்கு பாதையில் பாதுகாப்பு கட்டமைப்பை பொருத்துவதற்கும் வடக்கு தொடருந்து பாதையை புனரமைப்பதற்குமான பணிகளைத் துரிதப்படுத்தும் திட்ட முகாமைத்துவ பிரிவுவொன்று அமைக்கப்படவுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

இலங்கையின் தொடருந்து பாதை வலைப்பின்னலின் நீளம் 1450 கிலோமீற்றர்கள் என்பதோடு 1337 குறுக்கு ரயில் பாதைகள் காணப்படுவதாகவும் இவற்றில் 520 தொடருந்து குறுக்குபாதைகள் பாதுகாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2018 ஆம் ஆண்டு வரவு செலவு திட்டத்தில், மேலும் 400 தொடருந்து குறுக்கு பாதைகளில் பாதுகாப்பு கட்டமைப்பை ஏற்படுத்த தேவையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதுடன் எஞ்சியுள்ள தொடருந்து குறுக்கு பாதைகளை உள்ளடக்கிய வகையில் அமைப்பதற்கான திட்டம் ஹங்கேரிய அரசாங்கக்தின் நிதியுதவியுடன் அமைக்கப்படவுள்ளது.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வரையில் தொடருந்துப் பயணத்திற்கான நேரத்தை 40 நிமிடங்களாக குறைக்கும் வகையில் 150 கிலோமீற்றர் வேகத்தில் தொடருந்து பயணிப்பதற்காக மாஹோ சந்தியிலிருந்து ஓமந்தை வரையிலான தொடருந்துப் பாதை புனரமைக்கப்ட்டுள்ளது.

பொல்காவலையில் இருந்து குருநாகல் வரையில் இரட்டை ரயில் பாதையை அமைக்க சமிஞ்சை கட்டமைப்பபை பொருத்துவதற்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தை துரிதமாக செயற்ப்படுத்த திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை அமைக்க ஹங்கேரியா நாட்டின் ஏற்றுமதி இறக்குமதி வங்கி நிதியுதவின் கீழ் ரயில் குறுக்கு பாதை அமைப்பதற்கான திட்டத்தை நடைமுறைப்படுத்த போக்குவரத்து மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

ten + two =

*