;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (09.03.2018)

0

நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு சபாநாயகரின் கருத்து.

நாட்டின் நிலையை கருத்தில் கொண்டு அவசரகால சட்டத்திpனை அமுல்படுத்துவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டு தீர்மானம் நாடாளுமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்தார்.

சபாநாயகர் கரு ஜயசூரிய இன்றைய தினம் சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் இதனை தெரிவித்தார்.

அத்துடன் வாய்மூல வினாக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அமைச்சர்கள் சபையில் இல்லாமை கவலைக்குரிய விடயம் எனவும் சபாநாயகர் இதன்போது தெரிவித்துள்ளார்.

இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ள ஸ்டெஃபன் ரெப்

போர்க்குற்றங்கள் தொடர்பான முன்னாள் அமெரிக்க தூதுவர் ஸ்டெஃபன் ரெப், ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் உபகுழு கூட்டம் ஒன்றில் இலங்கை தொடர்பில் உரையாற்றவுள்ளார்.

எதிர்வரும் 12ம் திகதி திங்கட் கிழமை, மனித உரிமைகள் பேரவையின் 25ம் இலக்க அறையில் இந்த உபகுழு கூட்டம் நடைபெறவுள்ளது.

2009ம் ஆண்டு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தினால், போர்க்குற்றங்கள் தொடர்பான விசேடத் தூதுவராக ஸ்டெஃபன் ரெப் நியமிக்கப்பட்டதில் இருந்து, இலங்கை தொடர்பில் அவர் கண்காணிப்புகளை மேற்கொண்டுள்ளார்.

அத்துடன் இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில், 2010ம் ஆண்டின் நடுப்பகுதியில் அவரால் தயாரிக்கப்பட்ட அமெரிக்காவின் அறிக்கை வெளியாக்கப்பட்டிருந்தது.

மேலும் அவர் இரண்டு தடவைகள் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு, யாழ்ப்பாணம் உள்ளிட்ட பகுதிகளுக்கும் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாதாந்தம் ஒருமுறை சர்வமத தலைவர்கள் சந்திப்பிற்கு இணக்கம்

மாதாந்தம் ஒருமுறை சர்வமத தலைவர்கள் சந்தித்து, கலந்துரையாடி காணப்படும் பிரச்சினைகள் தொடர்பில் தீர்வுகளை பெற்று கொள்வதற்காக புத்தசாசன அமைச்சில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் சர்வமத தலைவர்கள், பௌத்த ஆலோசனை சபை, உரிய அமைச்சுக்களின் அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் காரியாலயங்களின் விசேட பிரநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

மாத்தளையில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்க உரிய நடவடிக்கை

சுயதொழில் முயற்சியாக வீட்டுத் தோட்டங்களில் தேனீ வளர்ப்பை ஊக்குவிக்கும் நடவடிக்கையை மாத்தளை மாவட்ட விவசாய அபிவிருத்திச் சபை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி இந்தத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு கடன் வசதிகள் வழங்கப்படுவதுடன் முறையான பயிற்சிகளும் வழங்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் முதல் கட்டமாக மாத்தளை மாவட்டத்தின் தம்புள்ளை, நாவுல பிரதேச செயலாளர் பிரிவுகளில் இருந்து 30 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களுக்கு உரிய பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seven + 12 =

*