;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (10.03.2018)

0

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை இன்று

நாட்டின் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்வதற்கான பரீட்சை கொழும்பில் இன்று இடம்பெறவுள்ளது.

தேசிய பாடசாலைகளுக்கும், மாகாண பாடசாலைகளுக்கும் தமிழ் சிங்கள பிரிவுகளில் நிலவும் வெற்றிடங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்கள் இவ்வாறு இணைத்துக்;கொள்ளப்படவுள்ளனர்.

இதேவேளை வனஜீவராசிகள் திணைக்களத்தின் வன அதிகாரிகளை இணைத்துக் கொள்வதற்கான பரீட்சை நாளை கொழும்பில் இடம்பெறவிருப்பாக பரீட்சைகள் ஆணையாளர் வி.சனத் பூஜித தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் சொத்துச் சேதங்களுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கான சுற்றுலாப் பயணிகளின் வருகை கடந்த பெப்ரவரி மாதத்தில் அதிகரித்துள்ளது.

இது 19 தசம் 3 சதவீத அதிகரிப்பாகும்.

சீனா, இந்தியா, ஐக்கியராஜ்ஜியம் ஆகிய நாடுகளில் இருந்து கடந்த பெப்ரவரி மாதத்தில் 2 இலட்சத்து 35 ஆயிரத்து 618 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை தந்துள்ளனர் என்று இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை அறிவித்துள்ளது.

மேல் மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கம்பக்டர் வாகனங்கள் வழங்கும் நிகழ்வு

மேல் மாகாண உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கம்பக்டர் (Compactor) வாகனங்கள் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.

கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் 22 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு 29 கம்பக்டர் வாகனங்கள் இதன்போது வழங்கப்பட்டன.இதன் மொத்த பெறுமதி 393 மில்லியன் ரூபாவாகும். குறித்த உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கம்பக்டர் வாகனங்கள் ஜனாதிபதியினால் வழங்கப்பட்டன.

இலங்கையில் நாளாந்தம் சேகரிக்கப்படும் திண்மக் கழிவுகளில் 60 வீதமானவை அதாவது 3500 மெற்றிக் தொன் கழிவுகள் மேல் மாகாணத்திலேயே சேகரிக்கப்படுகின்றன.

இந்த கழிவுகளைச் சேகரித்தல், அகற்றுதல் மற்றும் போக்குவரத்து போன்ற நடவடிக்கைகளுக்காக கம்பக்டர் வாகனங்கள் இல்லாமல் இருந்தமை பெரும் தடையாக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் மேல் மாகாண ஆளுநர் கே.சி.லோகேஸ்வரன், முதலமைச்சர் இசுர தேவப்பிரிய, மாகாண அமைச்சர்களான காமினி திலக்கசிறி, லலித் வனிகரத்ன ஆகியோர்; கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

seventeen − eleven =

*