;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (10.03.2018)

0

கண்டிக்கு விரைந்த ரணில்

கண்டியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை கண்டிக்குப் பயணித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

வன்முறைகள் அதிகம் இடம்பெற்ற பகுதிகளான திகன மற்றும் கென்கல்ல ஆகிய நகர்களில் பாதிக்கப்பட்ட மக்களை பிரதமர்சந்திக்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

இன்று பிற்பகல் நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

ஊவா, சப்ரகமுவ மாகாணங்களுடன், அம்பறை, மட்டக்களப்பு, காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில பிரதேசங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனுடன் சில பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வரை அதிகரித்து வீசக்கூடும் என காலநிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

இலங்கை தொடர்பான நான்காவது மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவு

சர்வதேச நாணய நிதியத்தின் நீடிக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் கீழ், இலங்கை தொடர்பான நான்காவது மீளாய்வு நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளன.

இதற்காக கடந்த மாதம் 27ம் திகதி இலங்கைக்கு வந்திருந்த சர்வதேச நாணய நிதியத்தின் குழு, நேற்றைய தினம் தமது மீளாய்வு நடவடிக்கைகளை நிறைவு செய்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் இணையத்தளத்தில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவிற்கும் இலங்கையின் உயர்மட்ட அதிகாரிகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளின் போது, அதிகாரிகள் மட்ட இணக்கப்பாடு காணப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் வொசிங்டனில் மேலதிக பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளன.

இதன்போது ஏற்கனவே 2016ம் ஆண்டு இணங்கிக் கொள்ளப்பட்டதன் பிரகாரம், நீடிக்கப்பட்ட நிதி வசதியளிப்பு உடன்படிக்கையின் அடிப்படையில் இலங்கைக்கு அடுத்தக்கட்ட கடன் தவணை வழங்குவது தொடர்பில் முடிவு செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

10 + 11 =

*