;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-4..!! (10.03.2018)

0

மட்டக்களப்பில் அதிகளவு மழை வீழ்ச்சி பதிவு

மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக மட்டக்களப்பு வானிலை அவதான நிலையத்தின் பொறுப்பதிகாரி சூரியகுமாரன் தெரிவித்தார்.

கிரான் பிரதேசத்தில் நேற்றிரவு வரையில் 80.6மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், உன்னிச்சைப் பகுதியில் 44 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், மட்டக்களப்பு நகரில் 26.4 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன் பாசிக்குடா பகுதியில் 36.5மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டள்ளதுடன் தாழ் நிலங்களிலும் வெள்ள நீர் தேங்கி நிற்கும் நிலமை காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க குடியுரிமையை தூக்கியெறிந்து ஜனாதிபதியாவேன்: கோட்டா

அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்க வேண்டிய நிலை ஏற்படுமாயின் அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்து கொள்வேன் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு விஷேட நேர்காணல் ஒன்றினை வழங்கிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின்மீது உண்மையான பற்றும் அன்பும் உள்ள ஒருவரும், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வந்த ஒருவரும், இராணுவத்தினரை பாதுகாக்கும் ஒருவரும், நாட்டில் கலாச்சாரத்தை பாதுகாக்கும் ஒருவரும், சுயநலமற்ற தூய்மையான அரசியலில் ஈடுபடும் ஒருவருமே ஜனாதிபதி வேட்பாளராக நிற்க தகுதியுடையவர் எனவும் கோட்டா இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து “தாங்கள் குறிப்பிட்ட அனைத்தும் தகுதிகளும் உங்களிடம் இருப்பதாகவும், நீங்களே ஜனாதிபதியாக வர வேண்டும் எனவும் சிலர் கருத்து வெளியிடுகின்றார்களே…? ” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்த கோட்டா “சிலர் அவ்வாறு கூறுகின்றார்கள் ஆயினும் காலம் அதனை தீர்மானிக்கும். அவ்வாறு ஜனாதிபதி வேட்பாளராக நான் களமிறங்க வேண்டுமாயின் நிச்சயமாக களமிறங்குவேன்” எனக் கூறியுள்ளார்.

அதற்காக அமெரிக்க குடியுரிமை தடையாக இருக்கும் பட்சத்தில் அதனையும் தூக்கி எறிய வேண்டிய நிலையும் ஏற்படும் எனவும் கோட்டா தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, சிங்கள இனத்தவரின் வாக்குகள் மாத்திரம் இல்லாமல் தமிழ் – முஸ்லிம் என்ற சிறுபான்மை இனத்தவர் அனைவரதும் வாக்குகள் எனக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு எனவும் கோட்டாபய தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்தும் சமூக வலைத்தளங்களுக்கு தடை

தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ள முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களைகள் தொடர்ந்தும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen − one =

*