;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (11.03.2018)

0

காலநிலை

இலங்கையை சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை காணரமாக நாட்டில் மழையுடன் கூடிய காலநிலை தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

மேகமூட்டம் மற்றும் மழையுடன் கூடிய காலநிலை நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமார் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி குறிப்பாக தெற்கு , ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மாத்தளை பொலன்னறுவை மாவட்டங்களிலும் பெய்யக்கூடும்.

50 முதல் 60 கிலோமீற்றர் வேகத்திற்கும் அதிகமாக குறிப்பாக தென் மாகாணம் மற்றும் மன்னார் மாவட்டத்தில் பலத்த காற்று வீசக்கூடும். ஏனைய பிரதேசங்களில் 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசும்.

சப்ரகமுவ மாகாணம் மற்றும் களுத்துறை மாவட்டத்தின் சில இடங்களிலும் சுமார் 75 மில்லிமீற்றர் மழை பதிவாகக்கூடும்.

தென்மேல், தெற்கு மற்றும் தென்கிழக்கு கடற்பரப்பில் காணப்படும் இயங்குநிலை மேகக்கூட்டங்கள் காரணமாக களுத்துறையிலிருந்து , காலி, ஹம்பாந்தோட்டை மற்றும் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் காணப்படுகின்றது.

அவ்வேளையில் கடல் சடுதியாக கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக மணித்தியாலத்துக்கு 70 -80 கிலோமீற்றர்வரை அதிகரித்து வீசக்கூடும்.

நாட்டின் கடற்கரையோரப்பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம் ஊடாக நீர்கொழும்பு மற்றும் காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான ஆழமற்ற கரையோரப்பகுதிகளில் 50 தல் 60 கிலோமீற்றருக்கு அதிகாமான காற்று வீசக்கூடும்.

கடற் பகுதிகளில் காற்று மணித்தியாலத்துக்கு 30 – 40 கிலோ மீற்றர் வேகத்தில் வடகிழக்கு திசையில் இருந்து கிழக்கு நோக்கி வீசும். இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் பலமான காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். இடிமின்னலிலிருந்து பொதுமக்கள் அவதானமாக செயற்படுமாறு திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

கம்பஹா – குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பம்

கம்பஹா மாவட்டத்தில் தொம்பே பிரதேச சபைக்குட்பட்ட 18 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளுக்கான குடிநீர் வழங்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கென 513 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. மக்கள் வங்கியின் ஒத்துழைப்பும் இதற்காக பெற்றுக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

காடுகளின் அளவை அதிகரிக்க வேலைத்திட்டம்

வன பாதுகாப்பு திணைக்களம் இந்த வருடம் 225 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காடுகளை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு தேவையான சுமார் நான்கு இலட்சம் மரக்கன்றுகள் நாட்டப்படவுள்ளன.

இது தவிர ஆறாயிரம் வீட்டுத்தோட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன. 600 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மீண்டும் காடு வளர்க்கப்படும்.

நாட்டின் காடுகளின் அளவை 32 சதவீதம் அதிகரிப்பது இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும்.

நாட்டின் மீன் உற்பத்தியை அதிகரிக்க திட்டம்

இவ்வருடம் நாட்டின் மீன் உற்பத்தியை எட்டு இலட்சம் மெற்றிக் தொன் வரை அதிகரிக்க மீன்பிடி மற்றும் நீரியியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது.

இந்த இலக்கை வெற்றி கொள்வதற்காக மீன்பிடியின் பின்னரான அழிவை கட்டுப்படுத்தல், குளிரூட்டல் வசதிகளை வழங்கல், தொழில்நுட்ப உபகரணங்களுடன் கூடிய மீன்பிடி படகுகளை அறிமுகப்படுத்தல்.

மேலும் 50 சதவீத சலுகையின் கீழ் மீனவர்களுக்கு பெரியளவிலான இழுவை படகுகளை வழங்குதல், மீனவர்களை ஊக்குவித்த போன்ற பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

3 × 4 =

*