;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-3..!! (11.03.2018)

0

மோடியுடன் ஜனாதிபதி பேச்சுவார்த்தை

இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

திடீரென வீசிய சுழல் காற்றினால் குடியிருப்புகளின் கூரைத் தகடுகள் சேதம்

திடீரென வீசிய சுழல் காற்றினால் குடியிருப்புகளின் கூரைத் தகடுகள் சேதமாகியுள்ளன.

தலவாக்கலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட கிறேட்வெஸ்டன் மாதிரி கிராமத்தில் 11.3.2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென வீசிய சுழல் காற்றினால், சில குடியிருப்புகளின் கூரைத் தகடுகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.

11.3.2018 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீரென ஏற்பட்ட இந்த சுழல் காற்றினால் சில குடியிருப்புகளின் கூரைகள் சேதமடைந்துள்ளதோடு, இப்பகுதியில் காணப்பட்ட சில மின்சார தூண்களும் காற்றினால் சாய்ந்து கீழே விழும் அபாய நிலை தோன்றியுள்ளது.

எனவே இது தொடர்பாக இப்பிரதேச மக்களால் தலவாக்கலை மின்சார சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள குடியிருப்புகளுக்கும்,வீட்டு உபகரணங்களுக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இருந்தும் சேதமடைந்த சில குடியிருப்புகளின் கூரைகளை, அயலவர்களின் உதவியோடு குடியிருப்பாளர்கள் சரிசெய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் மரக்கறி உற்பத்தியில் மீண்டும் முன்னேறியுள்ள யாழ்ப்பாணம்

பெரும் போகத்தில் மேற்கொள்ளப்பட்ட மரக்கறி மற்றும் நெல் அறுவடைகள் சந்தைக்கு வருவதால் இவற்றின் விலை எதிர்வரும் மாதங்களில் குறைய வாய்ப்பு உள்ளதாக ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தெரிவித்துள்ள அந்த ஆராய்ச்சி நிலையம்,

எதிர்வரும் 7 மாதங்களுக்குப் போதுமான நெல் அறுவடை தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது. இம்முறை பெரும் போகத்தில் 23 இலட்சம் மெற்றிக் தொன் அறுவடை எதிர்பார்க்கப்பட்டது. எதிர்வரும் தினங்களில், திறந்த சந்தையில் ஒரு கிலோ சம்பா அரிசியின் விலை 80 ரூபா வரை குறைவடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

யாழ்ப்பாணம், தம்புத்தேகம, புத்தளம் ஆகிய பகுதிகளில் இருந்து மரக்கறி கூடுதலாக கிடைக்கப் பெற்று வருகின்றது. மரக்கறியின் விலையில் தெளிவான வீழ்ச்சியும் எதிர்காலத்தில் எதிர்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, அரசாங்கம் நெல்லைக் கொள்வனவு செய்ததும் நெல்லின் விலை நிலையான மட்டத்திற்கு வரும். உருளைக் கிழங்கு, பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் ஆகியவற்றின் விலை 80 ரூபாவிற்கும் 120 ரூபாவிற்கும் இடைப்பட்ட மட்டத்தல் இருக்கும் என ஹெக்டர் கொப்பாகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிலையம் தெரிவித்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

18 − 12 =

*