;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-1..!! (12.03.2018)

0

உள்நாட்டிலேயே 85 சதவீத மருந்து வகைகளை தயாரிக்க நடவடிக்கை

சேனக பிபிலே மருந்தகக் கொள்கையை நடைமுறைப்படுத்தி நாட்டிற்குத் தேவையான மருந்து வகைகளில் 85 வீதத்தை உள்நாட்டிலே தயாரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வில் வைத்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

தற்போது அரசாங்க மருத்துவமனைகளில் மருந்து வகைகளுக்கு தட்டுப்பாடு இல்லை.

இதனால் நோயாளர்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

தொடரூந்து விபத்துக்களை குறைப்பதற்கான தெளிவூட்டல் இன்று முதல்

தொடரூந்து விபத்துக்களை குறைப்பதற்காக தொடரூந்து கடவைகளுக்கு அருகில் உள்ள மக்களுக்கு தெளிவூட்டல் மற்றும் பாதாகைகளை பொருத்தும் நடவடிக்கை இன்று ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வு நாவிந்த தொடரூந்து கடவைக்கு அருகில் இடம்பெறவுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 35 பேர் தொடரூந்து விபத்துக்களில் பலியாகியுள்ளனர்.

இதனுடன் கடந்த வருடம் தொடரூந்தில் மற்றும் தொடரூந்து பாதைகளில் செல்பி எடுக்க முற்பட்ட 24 பேர் உயிரிழந்துள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

இதனுடன் கடந்த வருடம் இடம்பெற்ற தொடரூந்து விபத்துக்களில் 955 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வடக்கில் ஏற்பட்டுள்ள அழிவு தொடர்பில் அறிவிப்பு

கடுமையான வறட்சி காரணமாக வடக்கில் 103,000 ஏக்கர் வயல்கள் அழிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் வடக்கு மாகாண விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டுமென வடக்கின் பிரதேச செயலாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த வாரத்தில் பிரதேச செயலாளர்கள் வறட்சியினால் பாதிக்கப்பட்ட வயல் நிலங்கள் தொடர்பில் மதிப்பீடு செய்துள்ளனர்.

இதனடிப்படையில் மன்னார் மாவட்டத்தில் மிகவும் மோசமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.

மன்னாரில் மட்டும் 32,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் 28,000 ஏக்கர் வயல் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

வடக்கில் எந்தவொரு விவசாய நிலமும் காப்புறுதி செய்யப்படாத காரணத்தினால், வறட்சி நட்டஈடு பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை உருவாகியுள்ளது.

கடந்த பருவ காலத்தில் நெற்செய்கையில் வடக்கு விவசாயிகள் ஈடுபடாத காரணத்தினால், இந்த போகத்திற்கான உர மானியங்களும் வடக்கு விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

sixteen + twelve =

*