;
Athirady Tamil News

பல்சுவைக்” குறுஞ்செய்திகளின் தொகுப்பு… “செய்தித் துணுக்குகள்” பகுதி-2..!! (12.03.2018)

0

நாளை நீர் வெட்டு

நாளை (13) காலை 9 மணி முதல் மாலை 6 களினிய பிரதேச சபை, வத்தளை நகர சபை மற்றும் பிரதேச சபை உள்ளிட்ட பகுதிகளுக்கு நீர் வெட்டு அமுலில் இருக்கும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, பியகம் பிரதேச சபையின் சில பகுதிகளுக்கு மட்டுமே இந்த நீர் வெட்டு அமுலில் இருக்கும் எனவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய திட்டம்

சிறுநீரக நோயைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வழிமுறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண ஆயுர்வேத ஆணையாளர் குமார அல்விஸ் தெரிவித்தார்.

மேற்கத்தைய வைத்திய முறையுடன் ஆயுர்வேத மருந்து மூலிகைகளையும் இணைத்து இதற்கான மருந்து வகை உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக உள்நாட்டு ஆயுர்வேத வைத்தியர்கள் பெரும் பங்களிப்பைச் செய்திருப்பதாக ஆயுர்வேத ஆணையாளர் மேலும் தெரிவித்தார்.

அதிகரிக்கவுள்ள ஏற்றுமதி நடவடிக்கைகள்

ஏற்றுமதி நடவடிக்கைகள் இந்த வருடத்தில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

வர்த்தக விற்பனை பொருட்களின் ஏற்றுமதி வளர்ச்சி 12 சத வீதத்தால் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக சபையின் தலைவர் இந்திரா மல்வத்த தெரிவித்துள்ளார்.

இதற்கமைய இந்த வருடத்திற்காக நிர்ணயிக்கப்பட்ட ஏற்றுமதி வருமானமான பதினாறாயிரத்து 631 அமெரிக்க டொலர் ஏற்றுமதியினை இலகுவாக எட்ட முடியும் என்றும் சபையின் தலைவர் நம்பிக்கை வெளியிட்டார்.

களுத்துறை – 90 சதவீதம் பூர்த்தியடைந்துள்ள நிர்மாணப்பணிகள்

களுத்துறை மாவட்டத்தில் கடந்த வருடம் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் வீடுகளை இழந்த 645 குடும்பங்களுக்கான வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் துரிதமாக இடம்பெற்று வருவதாக மாவட்ட செயலாளர் சந்தன ஜயலால் தெரிவித்தார்.

இவர்களுக்கான வீடுகளை அமைக்கும் பணிகள் 90 சதவீதம் பூர்த்தி அடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இந்த வேலைத்திட்டம் களுத்துறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் அமுலாக்கப்பட்டுள்ளதாக மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.

6 + sixteen =

*